பைனல்.. இந்திய பிளேயிங் லெவன்.. மாறும் ஆடுகளம்.. அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா?.. உத்தேச உலக கோப்பை அணி!

0
1702

நாளை நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. இந்தியாவில் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த கிரிக்கெட் திருவிழா முடிவு பெற இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையை நடத்தும் இந்தியாவின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது ரசிகர்களை மைதானத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

மேலும் இந்தியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட இருக்கின்ற காரணத்தினால், பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் எந்த பஞ்சமும் இருக்காது. இதனால் நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மிகச் சிறப்பானதாக அமையும்.

இறுதிப் போட்டி நடைபெறும் குஜராத் அகமதாபாத் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் ஆடுகளம் மெதுவாகவும் இருக்கும்.

இந்தக் காரணத்தால் இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அதிரடியாக முடிவு எடுத்து முகமது சிராஜை வெளியில் வைத்து ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. இறுதிப்போட்டி என்கின்ற காரணத்தினால் சூரிய குமாரை வெளியில் வைத்து, அஸ்வினை கொண்டு வருவதற்கான வாய்ப்புதான் குறைவு.

- Advertisement -

நிலைமைகள் இப்படி இருந்தாலும் கூட இந்திய அணி, தற்போதைய பிளேயிங் லெவனை வைத்து தொடர்ச்சியாக ஆறு போட்டிகளை 5 அணிகளுக்கு எதிராக வென்று இருக்கிறது. இதில் ஒரு நாக்அவுட் போட்டியும் அடங்கும். இப்படியான காரணத்தினால் இதே அணியைதான் களம் இறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பும்.

எனவே இந்த அடிப்படையில் நாம் கடந்த ஆறு போட்டிகளாக பார்த்த அதே இந்திய அணி இறுதிப் போட்டியிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவின் இரண்டு சுழப்பந்துவீச்சாளர்களே தேவையான சேதாரத்தை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்திப் யாதவ், முகமது சமி மற்றும் முகமது சிராஜ்.