தோனி போனபிறகு, அந்த பொறுப்பு என் தலையில் விழுந்துவிட்டது – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
1810

முன்பு தோனி இருந்தார், இப்போது இல்லை. நான் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விளையாடி வருகிறேன் என்று பேசியுள்ளார் ஹார்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியா சமீபகாலமாக டி20 போட்டிகளில் நிதானமாகவும், மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி வருகிறார். அதிரடியாக விளையாடக்கூடிய இவர் இப்படி நிதானமாக விளையாடுவது சில நேரங்களில் விமர்சனங்களை பெற்றுத்தந்தாலும் பல நேரங்களில் அவரது நிதானம் கீழ் வரிசையில் பல விதங்களில் இந்திய அணிக்கு உதவி வருகிறது.

- Advertisement -

இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டி, தற்போது நடந்து முடிந்திருக்கும் நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு டி20 போட்டிகள் என ஹார்திக் பாண்டியாவின் நிதானம் அணிக்கு முக்கிய பங்காற்றியது.

இந்நிலையில் எதற்காக தனது பேட்டிங் அணுகுமுறையில் இப்படியான மாற்றம்? மற்றும் பந்துவீச்சில் தொடர்ந்து முதல் ஓவர்களை வீசுவது ஏன்? என்கிற கேள்விகளை பத்திரிகையாளர்கள் ஹர்திக் பாண்டியா அவர்களிடம் எழுப்பினர். அதற்கு பதில் கொடுத்த அவர்,

“இப்போதும் எனக்கு சிக்ஸர்கள் அடிக்க பிடிக்கும். ஆனால் அணியின் சூழலுக்கு தகுந்தார் போல் மாறிக்கொள்ள வேண்டும். எனக்கு பார்ட்னர்ஷிப் அமைப்பதும், நன்றாக விளையாடி வரும் பேட்ஸ்மேனுக்கு பக்கபலமாக இருப்பதும், மேலும் அணி வீரர்களுக்கு நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுப்பதும் முக்கியமானதாக படுகிறது. ஆகையால் இந்த புதிய ரோலை நான் எடுத்துக் கொண்டேன். அழுத்தம் நிறைந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

முன்பு கீழ் வரிசையில் நிதானமாக விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி இருந்தார். நான் எனது இஷ்டம்போல அதிரடியாக ஆடினேன். இப்போது அவர் இல்லாததால் அந்த நிதானமாக விளையாடும் பொறுப்பு என் மீது வந்திருக்கிறது. எந்தவித தயக்கமும் இன்றி அதை நான் எடுத்துக் கொள்கிறேன். இதனால் எனது ஸ்ட்ரைக் ரேட் குறையும் என்பதை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அணியின் வெற்றிக்கு முன்பு ஸ்ட்ரைக் ரேட் ஒன்றும் பெரிதல்ல.” என்றார்.