இந்திய அணியின் ஓய்வறையில் பயம் சூழ்ந்துள்ளது – பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜோதிடம்!

0
105
Ind vs Pak

நடப்பு 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி 2-வது சுற்றில் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியைக் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது.

இந்தப்போட்டியில் தோற்கும் பட்சத்தில் இந்தியா அணி ஆசியக் கோப்பை தொடரை விட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறும். அதே சமயத்தில் வென்றால் இறுதி போட்டிக்கான வாய்ப்பில் தொடரும். இலங்கை அணி இந்தப் போட்டியை வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை மிக பிரகாசமாக்கும். தோற்றாலும் இறுதிப்போட்டி வாய்ப்பில் நிலைக்கும்.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்த்து ரிசப் பண்ட்டை வெளியில் வைத்தது. இரண்டாவது போட்டியில் இருவரையும் உள்ளே வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுத்தது. அதற்கு அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா உள்ளே வர, ரிஷப் பண்ட் அணியில் தொடர, ஒரே ஒரு பந்தை மட்டும் சந்தித்து விளையாடி இருந்த தினேஷ் கார்த்திக் வெளியே போனார்.

இந்த ஆசிய கோப்பை தொடரின் இடையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு தொடரை விட்டு வெளியேறியதும், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், பல மாற்றங்களை போட்டிக்குப் போட்டி தொடர்ந்து செய்ய வேண்டிய சூழலுக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிறைய மாற்றங்களோடு இந்திய அணி களம் இறங்கியது.

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த மாற்றங்கள், இந்திய அணியின் ஓய்வறையில் பயம் சூழ்ந்து உள்ளதைக் காட்டுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் கூறும்போது ” அவர்கள் இதுவரை செய்துள்ள அனைத்து மாற்றங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்திய அணி அழுத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது. இவ்வளவு மாற்றங்கள் தொடர்ந்து செய்யக்கூடாது. தினேஷ் கார்த்திக் விளையாடியது ஒரே ஒரு பந்து தான் ஆனால் அவர் அணியில் இடத்தை இழந்து இருக்கிறார். இந்தியா அறிவித்த அணியை நான் பார்த்த பொழுது அவர்கள் பயத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இலங்கை ஒரு தனி வீரரை நம்பி விளையாடவில்லை. அவர்கள் ஒரு அணியாக விளையாடுகிறார்கள். அவர்கள் முதல் போட்டியில் தோற்று பிறகு அடுத்து மீண்டு வந்த விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இலங்கை அணியை விட இந்திய அணி தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இலங்கை அணி விளையாடும் விதத்தை வைத்துப் பார்த்தால், அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வாய்ப்புகள் இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்!