ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதங்களை குவித்த 5 இந்திய வீரர்கள்

0
4223
Ajit Agarkar

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஏறத்தாள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் நீண்ட நேரம் விளையாடவே பார்ப்பார்கள். 50 ஓவர்கள் இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் அணியின் ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்துடன் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவார்கள்

அதன் காரணமாக ஆரம்பத்திலிருந்து சற்று நிதானமாக ஸ்கோர் செய்வதையே அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விரும்புவார்கள். இருந்தாலும் ஒரு சில சமயங்களில் சில பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் அரை சதங்களை அல்லது சதங்களை குளிப்பார்கள். ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன் குறைந்த பந்துகளில் சதம் அடித்து நாம் பார்த்திருப்போம்.

- Advertisement -

அதேபோல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் யார் என்று தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

5. யுவராஜ் சிங் – 22 பந்துகள்

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வங்கதேச அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் ஒரு போட்டியில் யுவராஜ் சிங் இந்த சாதனையை செய்தார்.அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி மிகச்சிறப்பாக ஆரம்பத்தில் இருந்து விளையாடியது, குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் கிட்டத்தட்ட 100 ரன்கள் இந்திய அணி குவித்தது, அதற்கு மிக முக்கிய காரணம் யுவராஜ் சிங்.

அந்த போட்டியில் யுவராஜ் சிங் 22 பந்துகளில் அரைசதம் குவித்து பங்களாதேஷ் அணியை திக்குமுக்காட வைத்தார். மேலும் இறுதியில் 32 பந்துகளில் 79 ரன்கள் குவித்து இந்திய அணியை மிகப் பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்தார். அந்த போட்டியின் இறுதியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

4. ராகுல் டிராவிட் – 22 பந்துகள்

Rahul Dravid

2003ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் மிக அற்புதமாக விளையாடி சதம் குவித்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோர் எட்டியிருந்த நிலையில் 44 வது ஓவரில் ராகுல் டிராவிட் பேட்டிங் செய்ய வந்தார்.

அவர் வந்த வேகத்தில் 22 பந்துகளில் அரை சதம் குவித்து அசத்தினார். குறிப்பாக போட்டியின் கடைசி பந்தில் அவர் தன்னுடைய அரை சதத்தை குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் ராகுல் டிராவிட் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவில் இந்திய அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

3. விரேந்திர சேவாக் – 22 பந்துகள்

Virender Sehwag ODI

அதிரடி ஆட்டத்திற்கு பேர்போன விரேந்திர சேவாக் 2001ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் குவித்து அசத்தினார். அந்த போட்டியில் முதலில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்கிற்கு 258 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் அப்பொழுது இளம் வீரராக விளையாடிய சேவாக் பேட்டிங் செய்ய வந்தார்.

22 பந்துகளில் அரைசதம் எட்டி, அந்த போட்டியில் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என 55 ரன்கள் இறுதியில் குவித்தார். இவர்களது அதிரடியான ஆட்டத்தால் காரணமாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 350 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய கென்யா 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2. கபில்தேவ் – 22 பந்துகள்

Kapil Dev ODI

1983 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2வது போட்டியில் கபில்தேவ் இந்த சாதனையை செய்தார்.

முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஆன்டி ராபர்ட்ஸ், வின்சன்ட் டேவிஸ் என அதிரடியாக பந்துவீச்சாளர்கள் பந்துவீச கபில்தேவ் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் கபில்தேவ் மொத்தமாக 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இருந்தார் அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

போட்டியின் முடிவில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றி இந்திய அணிக்கு உலக கோப்பை தொடரை நம்பிக்கையுடன் விளையாட ஒரு உத்வேகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

1. அஜித் அகர்கர் – 21 பந்துகள்

2000ம் ஆண்டில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடியது. அந்த தொடரின் 5வது போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அஜித் அகர்கர் 21 பந்துகளில் அதிவேக அரைசதத்தை குவித்து அசத்தினார். முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் (43.3 ஓவர்களில்) 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது.

அப்பொழுது களமிறங்கிய அஜித் அகர்கர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். மேலும் போட்டியில் இறுதி வரை விளையாடி அஜித் அகர்கர் 25 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய அஜித் அகர்கர் பௌலிங்கிலும் 8.4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் இறுதியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.