33 பந்து.. அதிவேக T20i  சதம்.. 11 பவுண்டரி 8 சிக்ஸர்.. மில்லர் ரோகித் சாதனை உடைந்தது

0
858
T20i

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் அறிமுகமான பிறகு, மிக வேகமாக கிரிக்கெட் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டி20 பிரான்சிஸைஸ் லீக்குகளை நிறைய கிரிக்கெட் நாடுகளின் வாரியங்கள் தனியாக நடத்தி வருகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் அதன் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைக்கிறது. இதில் கிடைக்கும் பணம் அவர்களது உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை சீராக்கி வளர்த்துவதற்கு உதவுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசிய கண்டத்தில் இருந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் புதிதாக நேபாள் அணிக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்த அணி எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் சமீப காலங்களில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் நமிபியா மற்றும் நேபால் அணிகள் மோதிக் கொள்ளும் டி20 தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தான் அதிவேகமாக 33 பந்தில் சதம் அடிக்கப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமிபியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மலான் குருஜர் 48 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மைக்கேல் வான் லிங்கன் 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இவர்களுக்கு அடுத்து ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஜான் நிக்கோல் லோஃப்டி ஈட்டன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 11
பவுண்டரி 8 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து மிரட்டினார். 36 பந்துகள் சந்தித்த அவர் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நமிபிய வீரர் 33 பந்துகளில் அடித்த இந்த சதம் அதிவேக சர்வதேச டி20 சதமாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பாக 34 பந்துகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள் வீரர் குசால் மல்லா சதம் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. தற்பொழுது இது உடைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பெரிய அணிகளில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், இந்தியாவின் ரோகித் சர்மா 35 பந்துகளில் இலங்கை அணிக்கு எதிராகவும் அடித்த சதங்கள் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நமிபியா அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து விளையாடிய நேபாள் அணி 186 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. 20 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணி வெற்றி பெற்றது.