கிரிக்கெட் போட்டியில் மிக அதிவேக பந்தை வீசிய 5 வீரர்கள்

0
676
Shoaib Akhtar

கிரிக்கெட் போட்டியில் எப்பொழுதும் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பவுலர்களும் பார்க்கப்படுவார்கள். ஒரு பேட்ஸ்மேன் நிதானமாக ரன் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு பவுலர் நிதானமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேனை திணறடிப்பது முக்கியம்.

அந்த விஷயத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அனைவரது கண்கள் எப்பொழுதும் இருக்கும். சமயத்தில் மெதுவாக பந்து வீசியும், தேவைப்படும் நேரத்தில் மிக அதிவேக பந்துகளை வீசி ஸ்டெம்பை பதம் பார்ப்பதும் அவர்களுக்கு கைவந்த கலை. அப்படி கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக பந்துகளை வீசிய பவுலர்களைப் பற்றி பார்ப்போம்

- Advertisement -

மிச்செல் ஸ்டார்க் – 160.4

ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீக்கு அடுத்தபடியாக மிக வேகமாக பந்து வீச கூடிய ஒரு பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தனது அதிவேக பந்து வீசினார்.

2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியில் ராஸ் டெய்லர் விளையாடிக் கொண்டிருந்தார், நன்றாக விளையாடி அதே சமயம் நியூசிலாந்து அணிக்காக 137 ரன்கள் அடித்து வைத்திருந்தார். அவரை அவுட் செய்யும் வண்ணம், ஸ்டார்க் மிக வேகமாக தனது பந்தை வீசினார். அவர் வீசிய பந்து சுமார் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. அந்த பந்தில் ராஸ் டைலர் அவுட் ஆகவில்லை என்றாலும், சர்வதேச அளவில் அந்த பந்து மிக அதிவேக பந்துகளில் ஒன்றானது.

ஜெஃப் தாம்சன் – 160.5

1975 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஃப் தாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு கட்டத்தில் மிக வேகமாக பந்து வீசினார்.அவர் வீசிய பந்து சுமார் 160.5 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் மிக அதிக வேகமான பந்துகளை வீசிய பவுலர்களில் தாம்சன் தனது பெயரை நிலை நிறுத்தினார்.

- Advertisement -

ஷான் டைட் – 161.1

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இவரது பந்துகளை மேற்கொள்ளவே ஒரு சமயத்தில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களும் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு மிக அதிவேகமாக பந்துகளை வீசுவார். இவரது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பின்னர் இவரால் வேகமாக பந்து வீச முடியவில்லை.

இருப்பினும் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இவர் ஒரு பந்தை 161.1 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரட் லீ – 161.1

Brett Lee

ஆஸ்திரேலிய அணிக்காக மிக அதிக வேகமாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களில் இவர் எப்பொழுதும் தனித்துவம் வாய்ந்த வீரராக இருப்பார்.

2005 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் இவர் தன்னுடைய அதிவேக பந்து வீசினார். இவர் வீசிய பந்து சுமார் 161.1 கிலோ மீட்டர் வேகத்துக்கு வந்தது. பந்துகளை மிக அதிவேகமாக வீசுவது மட்டுமல்லாமல் அதேசமயம் மிக அற்புதமாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் இவர் வல்லவர். அதன் காரணமாகவே சர்வதேச அளவில் இவர் மொத்தமாக 718 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ஷோயாப் அக்தர் – 161.3

பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவரை அனைவரும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இவர் பந்து வீசுவார்.

2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் இவர் தொடர்ச்சியாக மிக அதிக வேகமாக தனது பந்துகளை வழக்கத்திற்கு மாறாக வீசினார். அதில் ஒரு பந்தை 161.3 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசி, சர்வதேச அளவில் இன்றும் அதிவேக பந்து வீசிய முதல் பந்து வீச்சாளராக இவர் தன்னுடைய பெயரை நிலைநாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.