வீணானது ரமீஸ் ராஜாவின் சவடால்! மீண்டும் மோதுகின்றன இந்தியா பாகிஸ்தான் – ஜெய்ஷா மாஸ்டர் ஸ்ட்ரோக் !

0
1074

இந்த 2023 ஆம் ஆண்டானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையவிருக்கிறது . இந்த வருடத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஆசஸ் தொடர் என முக்கியமான போட்டி தொடர்கள் இந்த வருடம் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையவிருக்கிறது . மேலும் ஆசிய கோப்பையும் இந்த வருடத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்க இருந்ததால் அதில் இந்திய அணி கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இடையே இருந்தது.

ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட்டால் அதில் பாகிஸ்தான் பங்கேற்காது மேலும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்றும் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா சவடால் விட்டது நாம் அறிந்ததே ..

- Advertisement -

இந்த சூழ்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை போட்டிகளின் அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலானது இன்று வெளியிட்டுள்ளது . மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது . 50 ஓவர் உலகக் கோப்பையும் இந்த வருடத்தில் நடக்க இருப்பதால் அதனை மனதில் வைத்து இந்தப் போட்டி தொடரானது ஐம்பது ஒவர்களைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் இடம்பெற்றுள்ளன . ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் மற்றொரு சுற்றில் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணி இடம் பெற்றுள்ளன .

மொத்தம் 13 போட்டிகளைக் கொண்ட இந்த ஆசியக் கோப்பை ஆனது நீர்ப்பிடிவுகளில் ஆறு ஆட்டங்களையும் சூப்பர் போர் சுற்றில் ஆற ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியோடு சேர்த்து 13 போட்டிகளை உள்ளடக்கியுள்ளது . இந்தப் போட்டி நடைபெறும் இடம் மற்றும் போட்டி நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பானது இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

இந்தப் போட்டிக்கான உரிமையை பாகிஸ்தான் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்டுள்ளது இதனை பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா தனது ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார் .

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ள ஜெய்ஷா “ஆசியா அணிகள் 2023 24 காலண்டர் வருடத்தில் விளையாடப் போகும் போட்டிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது பற்றி குறிப்பிட்டுள்ள அவர் ” 2023-24 ஆண்டிற்கான நமது பாதை கட்டமைப்பு மற்றும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணைகளை வெளியிடுகின்றோம் . இது கிரிக்கெட் விளையாட்டை வீதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான நமது இணையற்ற முயற்சிகளையும் ஆர்வத்தையும் காட்டுகிறது . உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கண் கவர் போட்டிகளில் நம்மை கவர்வதற்கு தயாராக இருக்கின்றார்கள் . கிரிக்கெட்டிற்கான நல்ல நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார் .