ஐபிஎல் 2025

கில் தமிழ்நாட்டு பையன் என்ன தப்பு செஞ்சார்?.. கேப்டனா ஓவரை பிரிக்கக்கூட தெரியாதா? – ரசிகர்கள் விமர்சனம்

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் குறித்து ரசிகர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டு வருகின்றன. இந்த போட்டியில் கில் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது விமர்சனம் ஆகி இருக்கிறது.

ஐந்தாவது பவுலரில் ஏற்பட்ட குளறுபடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்து வீசுவது என்று அறிவித்தது. குஜராத் அணி பதினெட்டு ஓவர்களை வீசி முடித்து இருந்த பொழுது சிராஜ், அர்ஷத் கான், ரஷீத் கான் மற்றும் பிரசித் கிருஷ்ணா நால்வரும் தங்களுடைய நான்கு ஓவர்களையும் வீசி முடித்திருந்தார்கள். 19ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அவர் தன்னுடைய மூன்று ஓவர்களை முடித்திருந்தார்.

இந்த நிலையில் 19 ஓவர்களை 5 பந்துவீச்சாளர்கள் பந்து வீசி இருக்க, அதில் இஷாந்த் சர்மாவுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தாலும் கூட, அவர் 19 ஆவது ஓவரை வீசியதால் இருபதாவது ஓவருக்கு அவரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த தொடரில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்கும் தமிழ்நாட்டில் சாய் கிஷோருக்கு 19வது ஓவர் வரையில் ஒரு ஓவர் கூட பந்துவீச கில் வாய்ப்பு தரவில்லை.

- Advertisement -

இருபதாவது ஓவரில் கிடைத்த வாய்ப்பு

இந்த நிலையில் வேறு வழியே இல்லாத காரணத்தினால் 20 ஆவது ஓவரை கில் சாய் கிஷோரை வீச வைத்தார். அந்த ஓவரை வீசிய சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி அதிரடி ஆட்டக்காரர் அசுதோஷ் சர்மாவை வீழ்த்தி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குறித்தது.

இதையும் படிங்க : கிரிக்கெட்னா இந்தியாதான்.. டெல்லி குஜராத் போட்டியில் நடந்த ஆச்சரிய நிகழ்வு.. இனி எல்லாமே இப்படிதான்

மேலும் இந்த போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷத் கான் இருவரும் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தார்கள். பிரசித் கிருஷ்ணா 10 ரன்களுக்கு மேலும், ரஷித் கான் ஏறக்குறைய ஓவருக்கு பத்து ரெண்டும் கொடுத்திருந்தார்கள். இப்படி இருந்த பொழுதும் இடது கை பேட்ஸ்மேன் அக்சர் படேல் ஒரே ஒருவர் பேட்டிங்கில் இருந்த காரணத்தினால் கில் சாய் கிஷோருக்கு பந்து வீச வாய்ப்பு தரவில்லை. தற்பொழுது அவரது கேப்டன்சி குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் இவரா இந்திய அணியை வழிநடத்தக் கூடியவர்? என்று கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts