தற்போது குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில், இந்தியா கிரிக்கெட் டீம் பவர் ஹவுஸ் ஆக எப்படி மாறி வருகிறது என்பதை காட்டும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியை மட்டும் தோற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது. இதற்கு அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் ஆரம்பகாலம்
ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு ஆரம்பத்தில் மிக முக்கிய காரணமாக இருந்தது சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடியவர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என்கின்ற ரசிகர்களின் கற்பனை நிறைவேறியதுதான் முக்கியமானதாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் முறைத்துக் கொண்டவர்கள் கூட ஒரே அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.
மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக ஐந்து வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் இன்னும் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் கருத்துக்கள் இருந்தது. சர்வதேச அனுபவம் இல்லாத உள்நாட்டு வீரர்கள் அதிகம் இடம் பெற்றால் போட்டித் தன்மை குறைவாக மாறிவிடும் என்று கருதப்பட்டது.
இன்று நடந்த அதிசய நிகழ்வு
இந்த வகையில் ஆரம்பித்த ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் இரண்டு அணிகளிலும் பிளேயிங் லெவனில் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். முதலில் பந்து வீசும் குஜராத் டைட்டன்ஸ் மணிக்கு பேட்டிங் செய்யும்பொழுது மூன்றாவது வெளிநாட்டு வீரராக ரூதர்போர்ட் வரலாம். ஆனால் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு மூன்றாவது வெளிநாட்டு வீரர் வருவது கடினம்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. அணியை பாதியில் விட்டு மாலத்தீவு செல்வதற்கு பெயர் தான் மெண்டரா? பீட்டர்சனை கலாய்த்த ராகுல்
தற்போது இந்த அணிகள் நான்கு வெளிநாட்டு வீரர்களை கொண்டு விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரர்களையும், இந்திய உள்நாட்டு வீரர்களையும் நம்பி விளையாடிக் கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட் திறமைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் ஆக இந்தியா எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது!






