ஐபிஎல் 2025

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்.. கலக்கலான பாரின் ஆல்ரவுண்டர்.. வேற லெவல் ஃபியூச்சர் பிளானிங்.. என்ன நடக்கிறது?

அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைவார் எனவும், மேலும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சு நட்சத்திர ஆல்ரவுண்டர் ஒருவரும் கிடைப்பார் என்றும் நிறைய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை. மேலும் மாறிவரும் கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வாங்கப்படவும் இல்லை. எனவே சிஎஸ்கே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் மோசமான நிலைமையில் இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ரியான் பராக்கின் உறவினர் ஒருவர் இருக்கிறார். இவர் ரியான் பராக்கை அடுத்து கேப்டனாக கொண்டுவர பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கும் கொண்டு வந்திருக்கிறார். ராகுல் டிராவிட் ரியான் பராக்குக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த காரணத்தால் சஞ்சு சாம்சன் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து அடுத்த ஆண்டு விலகுவார் என்றும், அவரை மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சஞ்சு சாம்சங் சிஎஸ்கே அணிக்கு விளையாட விரும்புவதாகவும் தெரிகிறது.

- Advertisement -

வெளிநாட்டு ஆல் ரவுண்டர்

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்தின் காரணமாக தன்னுடைய பெயரை கொடுக்கவில்லை. தற்போது குணமடைந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு தன்னுடைய பெயரை நிச்சயம் கொடுப்பார்.

இதையும் படிங்க : 2007 டி20 WC வின்னர் சொல்றேன்.. சிஎஸ்கே இத செஞ்சிட்டு.. அந்த மீதிய தோனிகிட்ட விடுங்க – ஆர்பி சிங் பேட்டி

எனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரையும் வாங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக 45 முதல் 50 கோடி ரூபாய் வரை மினி ஏலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே ரவீந்திர ஜடேஜா வரையில் ரிலீஸ் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என மினி ஏலத்தின் போதுதான் தெரியவரும். ஆனால் இப்படி நடக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய அளவில் விரும்புகிறார்கள்!

- Advertisement -
Published by