இன்று சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்த போட்டியில் சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? என 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய வீரர் ஆர்பி.சிங் கூறியிருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் தோற்று ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. மேலும் அந்த அணி வெற்றி பெறுவதற்கான வீரர்களையும் கொண்டிருக்கவில்லை. எனவே புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து இந்த முறை சிஎஸ்கே அணி மேலே வராது என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கேதான் வலிமையானது
இப்படியான நிலையில் தற்போதுள்ள பஞ்சாபின் அணியை விட சிஎஸ்கே அணி வலிமையானது என ஆர்பி.சிங் தெரிவித்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், அவர்கள் மிச்சமிருக்கும் போட்டிகளை என்ன காரணத்திற்காக விளையாட வேண்டும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
அதே சமயத்தில் ஆர்பி.சிங் இந்த சிஎஸ்கே அணியால் இதற்கு மேல் எந்த மிராக்கிளும் செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறார். வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது, எனவே தங்கள் அணுகு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து பெருமைக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
தோனியிடம் விட்டுவிட வேண்டும்
இது குறித்து ஆர்பி.சிங் பேசும் பொழுது “தற்போது புள்ளி பட்டியலை பார்த்த பிறகு எந்த மேஜிக்கும் நடக்காது என்று நான் நினைக்கிறேன். தற்போது சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய பெருமைக்காக விளையாடி தாங்கள் சிஎஸ்கே என்று காட்ட வேண்டும். அவர்கள் தங்களால் முடிந்ததை அணிக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ளவற்றை ஒரு சிறந்த கேப்டனாக தோனி இடம் விட்டு விட வேண்டும்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. இப்படிப்பட்ட ராகுலை தான் பார்க்க ஆசைப்படுகிறேன்.. மாமனார் சுனில் செட்டி பேட்டி
“இப்போது உள்ள சிஎஸ்கே அணி பஞ்சாப் அணியை விட வலிமையானதாக இருக்கிறது சிஎஸ்கே அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக நூர் அகமத் மிகவும் சிறப்பாக இருக்கிறார். மேலும் கடந்த போட்டியில் பிரிவிஸ் அதிரடியாக பேட்டிங் செய்திருந்தார். எனவே இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு எளிதானதாக இருக்கப் போவது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






