மும்பை இன்டியன்ஸ் அணியை வதம் செய்த பாப்-விராட் ஜோடி ; அபார வெற்றி பெற்ற ஆர்சிபி!

0
191
Viratkohli

பதினாறாவது ஐபிஎல் சீசனில் ஐந்தாவது போட்டியாக இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி இந்த ஐபிஎல் சீசனின் முதல் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இன்று பெங்களூர் அணி எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணியை நிமிரவே விடாமல் அபாரமான வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

- Advertisement -

டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீசிய பெங்களூர் அணி இஷான் கிஷான் 10, கேமரூன் கிரீன் 5, ரோகித் சர்மா 1, சூரியகுமார் யாதவ் 15, டிம் டேவிட் 4 ரங்கள் என வரிசையாக நடையைக் கட்ட வைத்தது.

ஆனால் மற்றொரு முனையில் இளம் வீரரான திலக் வர்மா நின்று அபாரமாக விளையாடி அணியை நல்ல ரன்னுக்கு எடுத்துச் சென்றார். மொத்தம் 46 பந்துகளை சந்தித்த அவர் 84 ரன்கள் 9 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கரண் சர்மா நான்கு ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் விட்டுத்தந்து இரண்டு விக்கெட்டுகள் நிறுத்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் பாப் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை வதம் செய்து விட்டார்கள். மிக அபாரமாக விளையாடிய இருவருமே அரை சதம் அடித்து 100 ரன் பார்ட்னர்ஷிப்பை தாண்டி சென்றார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய கேப்டன் பாப்
43 பந்துகளில் 73 ரன்களை ஐந்து பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் எடுத்து அர்ஷத் கான் பந்து வீச்சில் டேவிட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க அனுப்பப்பட்ட தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் கேமரா
பந்து வீச்சில் திலக் வர்மா இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து 12 ரன்கள் எடுக்க, 16.2வது ஓவரில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸர் அடித்து விராட் கோலி ஆட்டத்தை முடித்து வைத்தார். விராட் கோலி 49 பந்துகளில் ஆறு பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷத் கான் 2.2 ஓவர்கள் பந்து வீசி 28 ரன்கள் விட்டு தந்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.