இந்த ரெண்டு டீம்ல ஒரு டீம்தான் உலக கோப்பை ஜெயிக்கும் – பாப் டு பிளிசிஸ் கணிப்பு!

0
6280
Faf

தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடராக, ஆசிய அணிகள் பங்கு பெறும் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் உலகக் கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை இந்தியா மற்ற ஆசிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாமல், தனியாக இந்தியாவில் வைத்து நடத்துகிறது.

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகளில் ஆசிய கண்டத்தின் ஐந்து அணிகள் போக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்து ஆகிய ஐந்து அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13ஆவது உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்ல அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் அணி எது என்று, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடி வரும் பாப் டு பிளிசிஸ் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“தென் ஆப்பிரிக்காவுக்கு நிஜமாகவே நல்ல அணி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் வெல்வது என்பது கடினம். அதேபோல் ஐசிசி கோப்பைகளை நிறைய முறை வென்றுள்ள ஆஸ்திரேலியாவையும் தாண்டுவது கடினம். இந்த இரண்டு அணிகள்தான் முக்கியமானவை.

தென் ஆப்பிரிக்க அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது. நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள்.

துணைக் கண்டத்தில் இல்லாத அனைத்து அணிகளுக்கும், துணைக் கண்டத்தில் விளையாடுவது என்பது எப்பொழுதும் சவாலாகவே இருக்கும். குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு சமமான ஆடுகளங்கள் கிடைக்கும். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சாளர்கள் வெளியில் வருவார்கள். இது கடினமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!