சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் – டூ பிளெசிஸ் விளக்கம்

0
317
Faf du Plessis RCB

2022-ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரின் 22-வது ஆட்டமாக, சென்னை பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று பல சுவாரசியங்களோடு நடந்து முடிந்திருக்கிறது.

முதலில் பேட் செய்த சென்னை அணியின் உத்தப்பா-சிவம்துபே ஜோடி பெங்களூர் அணியை 17 சிக்ஸர்களால் டீல் செய்து, இருபது ஓவர்களின் முடிவில் 216 ரன்களை குவித்து அசத்தியது. நான்கு தொடர் தோல்விகளுக்கும் சேர்த்து சென்னை விளையாடியதைப் போலிருந்தது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு பாஃப், அனுஜ், விராட், மேக்ஸ்வெல் நான்கு பேரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, ஷாபாஸ் அகமத், பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் போராடி 193 ரன் வரை இழுத்து வந்தனர். ஆனால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. சென்னைத் தரப்பில் தீக்சனா சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கிடையில் தன் சகோதரியின் திடீர் மரணத்தால் ஹர்சல் படேல் விளையாட முடியாமல் போனது குறித்து, கேப்டன் பாஃப் இடம் கேட்ட பொழுது, ஹர்சல் இல்லாமல் இருப்பது இன்று இரவு பந்து வீசும் பொழுது தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதைப் போலவே கடைசி பத்து ஓவர்களில் அவர் இல்லாத குறை தெளிவாகத் தெரிந்தது. கடைசி பந்து ஓவரில் மட்டும் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் 156 ரன்களை வாரி வழங்கி இருந்தார்கள்!