5ஆம் நாளில் கடும் மழை.. போட்டி டிரா ஆனால்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!

0
1672

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக முழுமையாக நடைபெறாமல் தடைபட்டால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணிக்கு பெருத்த அடி ஏற்படும். அந்த விவரங்களை பின்வருமாறு காண்போம்.

வெஸ்ட் இண்டீஸ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாக துவங்கியும் கடைசியில் வரிசையாக விக்கெட்டுகளை விட்டதால் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் மொத்தம் 364 ரன்கள் முன்னிலை பெற்றது.

365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காம் நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் அடித்தது. இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்கிய போது தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தற்போது வரை போட்டி நடைபெறவில்லை.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் சர்க்கிளில் வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றதால் 12 புள்ளிகள் பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா செய்யப்பட்டால் இரு அணிகளும் தலா 6 புள்ளிகள் பெறும் என்கிற விதிமுறைகள் இருக்கிறது.

ஒருவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட வீசாமல் டிரா ஆகும் பட்சத்தில், இந்திய அணிக்கு இது சிக்கலாக அமையும். ஏனெனில் வெளியூரிலிருந்து வந்து விளையாடும் அணிக்கு போட்டியிலிருந்து 33 சதவீதம் புள்ளிகள் மட்டுமே கொடுக்கப்படும். அதாவது 4 புள்ளிகள் கொடுக்கப்படும்.

ஐந்தாம் நாள் ஆட்டம் பந்துகள் வீசாமல் முடிவடைந்தால் இந்திய அணி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெறும். வெஸ்ட் இண்டீஸ் அணி 8 புள்ளிகள் பெறும்.

இப்போட்டி நடைபெற்றிருக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 12 புள்ளிகள் பெற வேண்டிய இடத்தில் இந்திய அணி 6 அல்லது 4 புள்ளிகள் மட்டுமே பெற்றால் கடைசியில் இது இந்திய அணிக்கு சிக்கலாக அமையலாம். புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையிலும் செல்லலாம் என்பதால் ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றாக வேண்டும் என்று இந்திய வீரர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.