எல்லாமே கையில்தான் இருந்தது… ஆனால் இதனால்தான் எல்லாமே கெட்டது… ரோஹித் சர்மா வருத்தமான பேச்சு!

0
6750
Rohit sharma

இன்று ipl பதினாறாவது சீசனில் 35 வது போட்டியாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

டாசை இழந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பவர் பிளேவில் முதல் ஐந்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவின் நகர்வுகளும் சரியில்லை, மும்பை அணியின் பந்து வீச்சும் சரியில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு குஜராத் 206 ரன்கள் குவித்தது. கில் அரைசதம் அடித்து அசத்தினார். டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா மூவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு இவ்வளவு பெரிய இலக்கை துரத்துவதற்கு யார் முன் என்று ரண்களை எடுத்துக் கொடுத்து இருக்க வேண்டுமோ, அந்த நட்சத்திர பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினார்கள். இந்த காரணத்தால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் மிகப்பெரிய அளவில் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது!

தோல்விக்கு பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” இது எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆட்டம் ஆரம்பத்தில் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது ஆனால் நாங்கள் பின்பு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். இது திட்டங்களை செயல்படுத்துவது பற்றியது. எது சரியாக இருக்கும் யார் பேட்ஸ்மேன் என்று பார்த்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் இறுதியில் நாங்கள் அதை செய்யாமல் ரண்களை நிறைய கொடுத்து விட்டோம்!” என்று கூறினார்!

தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா
” ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருப்பதை பார்க்க முடியும். எங்களுடைய பலம் நீண்ட பேட்டி வரிசை. ஆனால் நாங்கள் இதை சரியாக பயன்படுத்தி முன்னேறி போகவில்லை. பனிப்பொழிவு நிறைய இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடு இருந்தால் இந்த இலக்கை துரத்தி இருக்க முடியும். ஆனால் நாங்கள் நன்றாக துவங்கவில்லை. 200 ரன்களை துரத்தும் பொழுது, நீங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால் உங்களால் சரியாக முடிக்க முடியாது!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -