“எல்லாமே உண்மைதான்.. ரிலாக்ஸா இருங்கப்பா ” – வார்னருக்கு திருப்பி முகமது கைப் பதிலடி!

0
564
Kaif

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்தும், அது குறித்தான சர்ச்சைகளும் விவாதங்களும் இன்னும் முடியாமல் இருந்து வருகிறது.

நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி 11 போட்டிகளில் பத்து போட்டிகளை வென்றது. ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் ஒன்பது போட்டிகளை வென்றது.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்திய அணியே மிகச்சிறந்த அணியாக இருந்தது. மேலும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணியை சிறந்த அணியாக இந்த உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்திருந்தார்கள்.

இப்படி இருந்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தது துரதிஷ்டவசமானதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தோல்வியில் மிக முக்கியமான பங்காக ஆடுகளம்தான் இருக்கிறது.

இது குறித்து நேற்று முன்தினம் பேசியிருந்த முகமது கைஃப் ” இது இன்னும் மூழ்கவில்லை. உலகக்கோப்பையின் சிறந்த அணியான இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் அணி செய்த விதத்தை எல்லோரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நீங்கள் விளையாடிய மிகச் சிறப்பான கிரிக்கெட் பிராண்டை தொடர்ந்து செய்யுங்கள்!” என்று கூறியிருந்தார்!

- Advertisement -

இதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து ” உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெல்வது மைதானத்தில் நடக்கிறது பேப்பரில் அல்ல என்பதை முகமது கைப்புக்கு நினைவு படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!” என்று கூறியிருந்தார்.

முகமது கைப் பின் கருத்துக்கு டேவிட் வார்னர் எதிர்வினையாக “எனக்கு முகமது கைப்பை பிடிக்கும். காகிதத்தில் என்ன இருக்கிறது என்பது பிரச்சனை கிடையாது. களத்தில் அன்றைய நாளில் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதனால்தான் இதை இறுதிப்போட்டி என்கிறார்கள். அன்றைய நாளில் எந்த வழியிலும் இது செல்லலாம்!” என்று கூறியிருந்தார்.

தற்பொழுது திருப்பி டேவிட் வார்னருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முகமது கைஃப் கூறும் பொழுது “உண்மைதான்.. அது ஆஸ்திரேலியாவில் இறுதி நாளாக இருந்தது அவர்கள் வென்றார்கள். இதில் மேலும் ஒரு உண்மை என்னவென்றால், இந்தியா பத்து ஆட்டங்களில் வென்று பதினோராவது ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அவர்களிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்கள் உலக கோப்பையில் சிறந்த அணி. காகிதத்திலும் களத்திலும் இந்த இரண்டுமே உண்மைகள்தான். எனவே ரிலாக்ஸ் ஆஸ்திரேலியா!” என்று கூறியிருக்கிறார்!