“ஊழலான திமிர் பிடித்த ஆளால எல்லாம் கெட்டுப் போகுது” – இந்திய முன்னாள் வீரர் பிசிசிஐ மீது அதிரடி தாக்கு!

0
1596
BCCI

இந்திய அணி கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் உள்நாட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருந்தாலும், வெளிநாட்டில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சறுக்கி வருகிறது.

இன்னொரு பக்கத்தில் விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது, அவருக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து நிறைய நெருக்கடிகள் உருவானதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் டி20 இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிக் கொள்ள விருப்பப்பட்டு விலகினார்.

- Advertisement -

அந்த நேரத்தில் கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக தற்போதைய செயலாளர் ஜெய் ஷா ஆகியோர்தான் இருந்தனர். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தனியாக, டி20 கிரிக்கெட்டுக்கு தனியாக நாங்கள் கேப்டன்களை வைக்க மாட்டோம் என்று கூறி விராட் கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். தற்போது இந்த இரண்டு வடிவத்திற்கும் இரண்டு கேப்டன்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது விராட் கோலி தன் கைவசம் இருந்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் உதறி முழு நேர வீரராக வீரராக தொடர ஆரம்பித்தார். இந்த நிலையில் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய குழு ரோகித் சர்மாவை கேப்டனாகவும், ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராகவும் கொண்டுவந்தது.

அப்போது இருந்து இப்போது வரை நிறைய சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. அது இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் டிக்கெட் விற்பனை, மழை இடையூறு தெரிந்தும் இலங்கையில் ஆசியக் கோப்பையை நடத்துவது, இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவித்தது என்று தொடர்கிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறும்பொழுது “ஊழல் கொண்ட, திமிர் பிடித்த ஒரு நபரின் செயல்கள், ஊழலற்ற ஒட்டுமொத்த நிர்வாகத்தின் நன்னடத்தைக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறது. அது ஒட்டுமொத்த அமைப்பின் பெயரை கெடுக்கிறது.

இந்தியாவில் நடத்தப்படும் உலகக் கோப்பை ஏற்பாடுகளில் நாம் குழப்பி விட்டோம் என்பது விவாதத்திற்கு இடமின்றி உண்மையானது. அட்டவணை வெளியிடுவதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்பு வெளியிட்ட அட்டவணையில் 5 போட்டிகளை மாற்றியது மோசமானது.

இது போதாது என்றால், வெளிப்படையாற்ற நியாயமற்ற உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை. இது கள்ளச்சந்தையாளர்களை மட்டுமே ஊக்குவிக்கும். உலக கோப்பையை நடத்துவது பெருமையான விஷயம். இது ரசிகர்களுக்கு சிறப்பான நேரமாக இருந்திருக்க வேண்டும். இது குறித்து நாம் குரல் எழுப்பி கேட்க வேண்டும். இது தேசிய கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை!” என்று கூறி இருக்கிறார்!