அவரைப் பற்றிய அனைத்தும் தற்போது உண்மையற்றவை- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பு கருத்து!

0
66
Sanjay manjrekar

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் வரை பெரிய பேசுபொருளாக இருந்தவர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. ஆனால் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்பு பெரிய பேசு பொருளாக மாறி இருப்பவர் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தூண்களான ஜஸ்பிரித் பும்ரா முகமது சமி இருவரும் இல்லாது இந்த ஆசியக் கோப்பை தொடரை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த நிலையில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இவருக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை பந்துவீச்சில் தந்தவர் ஹார்திக் பாண்டியா தான். 4 ஓவர்கள் பந்து வீசிய இவர் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை முக்கிய நேரத்தில் கைப்பற்றியதால் தான் பாகிஸ்தான் அணியை 147 என்ற ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.

அடுத்து ஹர்திக் பாண்டியா மிகவும் ஒரு இக்கட்டான நேரத்தில் பேக் செய்ய வந்தார். அவர் வரும் பொழுது ஆறு ஓவர்களுக்கு 59 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் களம் இறங்கியவர் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதெல்லாம் சேர்த்து ஹர்திக் பாண்டியா வை அந்த போட்டிக்கு பின்பு மிகப்பெரிய பேசுபொருளாக ரசிகர்கள் வட்டத்திலும் மீடியா வட்டத்திலும் மாற்றியிருக்கிறது.

அப்போது ஹர்திக் பாண்டியா குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ” இப்பொழுது அவரைப் பற்றி நாம் கேள்விப்படும் உணரும் எல்லா விஷயங்களும் உண்மையற்றவை. அவரது பந்து வீச்சு முன்னேற்றுவது. அவர் மற்றவர்களோடு சேர்ந்து பந்துவீசும் பொழுது சில நல்லவைகளை நாம் பெற்றோம். அவர் அழுத்தத்தின் கீழ் நிதானமாகவும் புத்திசாலித்தனத்துடன் இருந்தார். இதுதான் அவரிடம் நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமானது. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக நல்ல ரிதத்துடன் ஆடக்கூடியவர். இதைப் பயன்படுத்தி அவர் ஒரு சிறப்பான வழியை அதற்குள் கொண்டு வந்தார்” கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அழுத்தம் அதிகமாக இருந்தது. ஆனால் அழுத்தத்தின் கீழ் அவர் விளையாடிய ஷாட்கள் மிகச் சிறந்தவை. இறுதிநேரத்தில் பந்துவீச்சாளர் தான் அதிக அழுத்தத்தில் இருப்பார் என்று அவர் நம்புகிறார். அந்த நம்பிக்கையுடன் தான் அவர் விளையாடுகிறார். நீங்கள் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து அவர் வேறு ஒன்றாக இருக்கிறார் ” என்றும் கூறியுள்ளார்!