விராட் கோலியின் மோசமான ஃபார்மிற்கு இதுவே காரணம் – ஆர்சிபி அணி கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ்

0
1198

நேற்றிரவு நடந்த முடிந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 70 ரன்கள் குவித்தார். பெங்களூரு அணியில் ஹர்ஷால் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் விளையாடிய பெங்களூர் அணி ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 35 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

விராட் கோலிக்கு தொடரும் சோதனை

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாட தொடங்கியவர் எதிர்பாராதவிதமாக ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 20 ரன்கள் குவித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர் 236 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 19.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 113.46 மட்டுமே ஆகும்.

- Advertisement -

விராட் கோலி குறித்துப் பேசியுள்ள ஃபேப் டு பிளேசிஸ்

பெங்களூரு அணியின் கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் விராட் கோலி குறித்து ஒரு சில விஷயங்களை தற்போது பேசியிருக்கிறார்.” நடப்பு சீசனில் எந்தெந்த வகைகளில் எல்லாம் அவுட்டாக முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் விராட் கோலி அவுட் ஆகி வருகிறார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர்கள் ஒரு சமயத்தில் கடினமான பாதைகளை கடந்து தான் தீர வேண்டும். அதை தான் தற்போது விராட் கோலி கடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் மிக அற்புதமாக ஒரு சில ஷாட்களை அடித்தார்.

விராட்கோலி கடினமாக உழைத்து இனி தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் தன்னுடைய மனதை தைரியமாக வைத்திருக்க வேண்டும். பாசிட்டிவாக இருப்பது அவசியம் என்றும் விராட் கோலியை பற்றி நம்பிக்கையான விதத்தில் ஃபேப் டு பிளேசிஸ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் அந்த ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதை குறிப்பிட்டு பேசிய கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ்,”இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே எங்களுக்கு மீதம் உள்ளது. அந்த ஒரு போட்டிக்காக கடுமையாக பயிற்சி கொடுப்பதன் மூலம் வெற்றி கிடைத்துவிடாது.

வெற்றியை சாத்தியப்படுத்தும் விதத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து, எஞ்சியுள்ள அந்த ஒரு போட்டியில் விளையாடியாக வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறும் விதத்தில் எங்களது ஆட்டம் அமையும் என்றும் ஃபேப் டு பிளேசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.