“எல்லோரும் இந்த இந்திய பிளேயர்கிட்ட ஐடியா கேட்டு கத்துக்கோங்க” – பாகிஸ்தான் இமாத் வாசிம் பேச்சு!

0
548
Imad

சில மாதங்களுக்கு முன்பாக 35 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர் இடதுகை சுழற் பந்துவீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டர். மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 லீக் மற்றும் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

- Advertisement -

இன்னும் ஒன்று இரண்டு வருடங்களுக்கு மேல் விளையாடக்கூடிய அளவில் இருந்தாலும் திடீரென இவர் ஓய்வு பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் சர்ச்சைகளை உருவாக்கியது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தனக்கு வேண்டப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து, இவரைப் போன்ற சில வீரர்களை தொடர்ச்சியாக வெளியில் வைத்ததாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது.

இதன் காரணமாக பொறுத்துப் பார்த்த இமாத் வாசிம் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் ஓய்வு பெற்றதும், இவரை மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரச் சொல்லி, நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இவரது இடத்தில் விளையாடி வரும் முகமது நவாஸை விட இவர் முக்கியமானவர். குறிப்பாக இவரால் பவர் பிளேவில் பந்து வீச முடியும். மேலும் இறுதிக்கட்டத்தில் மிக அதிரடியாக பேட்டிங் செய்வதோடு, சூழ்நிலைக்கு தகுந்தது போலவும் விளையாட முடியும்.

எனவே இவரை டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான பேச்சு வார்த்தைகள் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பற்றி மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

விராட் கோலி குறித்து இமாத் வாசிம் பேசும் பொழுது “எல்லோரும் விராட் கோலி இடம் ஆலோசனை பெற்று கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று நான் கூறுவேன். ஏனென்றால் அவரை உலகம் மேலும் மேலும் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க விரும்புகிறது. அவர் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அவரைப் போன்ற ஒரு கேரக்டரை கிரிக்கெட் களத்தில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!