“தன்னோட டீம் ஆபத்துல இருந்ததும்.. மனுஷன் அப்படியே மாறிட்டாரு!” – மைக்கேல் வாகன் முதல் முறையாக மனம் திறந்த பாராட்டு!

0
24850
Rohit

நேற்று இந்திய அணி லக்னோ எகானா மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டிகள் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் 49, கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்தார்கள்.

நேற்றைய ஒட்டுமொத்த போட்டியிலும் இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்கள்தான் முதல் மூன்று இடங்களில் இருந்தது. மற்ற பேட்ஸ்மேன்களால் இந்த ஆடுகளத்தில் நிலைக்க முடியவில்லை. அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

பவர் பிளேவில் இரண்டு சிக்ஸர்கள் உடன் அதிரடியாக ஆரம்பித்தார் ரோஹித் சர்மா. ஆனால் விக்கெட் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க, விக்கெட்டுகள் வேகமாக விழ, அவர் தன்னுடைய ஆட்ட பாணியை மாற்றிக் கொண்டார். நேற்று மீண்டும் பழைய ரோஹித் சர்மாவாக திரும்பியவர், அணிக்காக பொறுமையாக விளையாடி ரன் கொண்டு வந்தார். அவருடைய இந்த பொறுப்பான ஆட்டமே நேற்று வெற்றிக்கு முக்கிய காரணம்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்கினார். இந்தியா இந்த ஆட்டத்தில் 30 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் என்று அழுத்தத்தில் இருந்தது.

ரோகித் உடைய மைண்ட் செட் அதிரடியாகவும் பாசிட்டிவாகவும் இருக்கக்கூடியது. அவர் பவுண்டரி அடிக்க எப்பொழுதும் முயற்சி செய்யக் கூடியவர். ஆனால் அவர் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு கே.எல். ராகுலுடன் இணைந்து டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல மாறினார்.

அவருடைய மனதில் எப்பொழுதும் பவுண்டரி அடிக்க முடியும் என்கின்ற சிந்தனை இருந்தது. லிவிங்ஸ்டன் வந்த பின்பு அவரது ஓவரில் அழகான பவுண்டரி ஒன்றை ஆடினார். எனவே அவர் பவுண்டரி அடிக்கும் எண்ணத்தை முழுவதுமாக கைவிடவில்லை. இது ஒரு அற்புதமான கேப்டன் நாக். ஏனென்றால் அவரது அணி கொஞ்சம் அழுத்தத்தில் இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!