எரிமலை போல் நின்ற தோனியிடம் ஒரு இன்ச் தவறி இருந்தாலும் கதை முடிந்தது ; ஆனா அவர் கலக்கிட்டார் – ப்ரெட் லீ வெளிப்படையான பாராட்டு!

0
2353
Brett Lee

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடைசிப் பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக நடந்து முடிந்தது!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு ஜாஸ் பட்லர் அரைசதத்துடன் 175 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சென்னை அணிக்கு வெற்றி சாத்தியம் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

- Advertisement -

ஆனால் ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி சென்னை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். கடைசி ஒரு ஓவரில் 21 ரன்கள் தேவை எனும் பொழுது, முதல் மூன்று பந்துகளில் 14 ரண்களை விட்டுக் கொடுத்த சந்தீப் சர்மா, கடைசி மூன்று பந்துகளை மிகச் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே தந்தார். மூன்று பந்தில் மகேந்திர சிங் தோனி இரண்டு பந்துகளை சந்தித்து அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரவீந்திர ஜடேஜாவாலும் ஒரு பவுண்டரிக்கு போக முடியவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் பேக்கப் வீரராக கூட சந்திப் சர்மாவை எந்த அணியும் எடுக்கவில்லை. கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரதான இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஆன பிரசித் கிருஷ்ணா காயம் அடையவும் ஐபிஎல் தொடருக்குள் மீண்டும் சந்திப் சர்மா வந்தார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளரின் நான்காவது இடம் இவருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்திப் ஷர்மா குறித்து உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறும் பொழுது “போட்டி முடிந்து பிரசன்டேஷன் நிகழ்வில் ஓவர் த விக்கெட்டில் இருந்து பந்து வீசியது வேலை செய்யவில்லை, ரவுண்ட் த விக்கட்டில் இருந்து பந்து வீச முடிவு செய்தேன் என்று அவர் பேசியது எனக்கு பிடித்திருந்தது. அது அவருக்கு சரியான ஆர்க் ஆக இருந்தது. அவர் அந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட மாதிரி பந்து வீசாமல் ஒரு இன்ச் மாற்றி வீசி இருந்தால், எரிமலை போல் பேட்டிங் செய்து கொண்டிருந்த தோனி அதை சிக்ஸர் அடித்து இருப்பார். ஆனால் அவர் கடைசி மூன்று பந்துகளையும் மிகச் சிறப்பாக வீசி, மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு இல்லாத போதும் வென்றார். இது மிகச் சிறப்பான ஒன்று!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -