“வெஸ்ட் இண்டீஸ் கூட ரன் அடிக்கிறது பெருமையா?” – பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா!

0
5219
Rohitsharma

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது இந்திய அணி முதல் டெஸ்ட் வென்று முன்னிலையில் இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனி ஒரு பந்துவீச்சாளராக வெற்றியை மிக வேகமாக இந்திய அணியின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார்.

இந்திய அணியின் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை உண்டாக்கவில்லை. ஏற்கனவே பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்வது பெரிய சாதனையே கிடையாது என்கின்ற வகையில் நிறைய கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டன. தற்பொழுது இதற்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்து பேசி இருக்கிறார்.

போட்டி முடிவுக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” நாட்டுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு ரன்களும் மிக முக்கியமானவை. நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம் என்று சொல்லி இந்த பேச்சை நான் ஆரம்பிக்க விரும்புகிறேன். அவர்களை 150 ரன்கள் சுருட்டியது போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தது.

- Advertisement -

இங்கு பேட்டிங் செய்வது என்பது கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். அதையே நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அப்படி பேட்டிங் செய்து நாங்கள் 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம். பின்பு வெளியேறி பந்துவீச்சில் அவர்களை சுருட்டி வெற்றி பெற்றோம்.

ஜெய்ஸ்வால் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் தயாராக இருக்கிறார் என்று ஏற்கனவே நமக்கு காட்டி இருக்கிறார். மிக விவேகமாக பேட்டிங் செய்தார். அவரது மனோதிடமும் சோதிக்கப்பட்டது. எந்த நிலையிலும் அவர் பீதி அடையவில்லை. அவருக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளின் படி அவர் நடந்து கொண்டார்.

அஸ்வின் ஜடேஜா பற்றிசொல்வதற்கு நிறைய இல்லை. அவர்கள் தொடர்ந்து இப்படி இந்திய அணிக்கு செய்து கொண்டே வருகிறார்கள். முடிவுகளே அவர்கள் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டக் கூடியது. இது போன்ற ஆடுகளங்கள் அவர்களுக்கு மிக வசதியானது. அஸ்வின் வெளியே வந்து சிறப்பாக பந்து வீசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது எங்களுக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிக்கான புதிய சுழற்சி. நாங்கள் ஆடுகளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. நாங்கள் இங்கு வந்து முடிவுகளை பெற விரும்பினோம். நாங்கள் நன்றாக தொடங்குவதுதான் முக்கியமானதாக இருந்தது. இப்பொழுது இதே வேகத்தை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் இப்பொழுது இரண்டு புதிய வீரர்களும் அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடாத வீரர்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களை களத்தில் எப்படி இறக்குவது என்று பார்க்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!