“ரோகித் கோலி கூட சண்டை போட தயாராக இருக்கோம்.. காரணம் இதுதான்!” – மெக்கலம் அதிரடி பேச்சு!

0
348
Virat

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கிரிக்கெட் என்பது அவர்களுடைய கௌரவ அடையாளம். அதேபோலத்தான் இங்கிலாந்துக்கும். ஆனால் ஆஸ்திரேலியா போல அவர்களுடைய பாரம்பரியத்தை வெற்றிகரமாக இங்கிலாந்தால் தொடர முடியவில்லை. தோல்விகள் அவர்களை எப்பொழுதும் சூழ்ந்து இருந்தது.

இந்த நிலையில்தான் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவிக்கு வந்தார். அவர் வந்த பிறகு ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முகம் மாறியது.

- Advertisement -

இங்கிலாந்து மொத்த அணியும் சேர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டை அணுகுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டை பேட்டிங் பௌலிங் என அனுப்பியது. வித்தியாசமான திட்டங்களுடன் களத்திற்கு வந்து அவர்கள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் விதத்திற்கு, உலகெங்கும் இருந்து ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒரு நாடான இந்தியாவுக்கு, இந்தியாவை எதிர்த்து விளையாட, இன்னும் இரண்டு மாதங்களில் இங்கிலாந்து அணி வர இருக்கிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களில் பலரது கவனத்தையும் கவரக்கூடிய தொடராக இது அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள மெக்கலம் கூறும் பொழுது “எனக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்சி பிடிக்கும். அவரது கேப்டன்சி தைரியமானது என்று நான் நினைக்கிறேன். அவர் அதிகப்படியான ரிஸ்க் எடுக்கிறார். மேலும் இதுபோன்ற திட்டங்களை இந்திய கிரிக்கெட்டில் சேர்க்கும் பொழுது அது மிகச் சிறப்பானதாக மாறும். இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

வெளிப்படையாக நான் ஆர்சிபி அணியில் இருந்த போது இருந்தே விராட் கோலியை நன்கு தெரியும். அவரை அப்பொழுதே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்தார்கள். அவர் பில்லியன் கணக்கான மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் காப்பாற்றினார். அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டுக்கும் அவர் தகுதியானவர்.

இப்படியான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடன் நாங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியாவில் சண்டையிட தயாராக இருக்கிறோம். இது மிகுந்த கடினமான ஒன்றாக இருக்கும். சொந்த சூழ்நிலையில் மிகவும் சவாலான ஒரு அணியை சந்தித்து விளையாடுவது, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும்!” என்று கூறியிருக்கிறார்!