இந்த 33 வயசு பிளேயர் இந்தியா கூட தோக்க வைப்பார்.. அவரை நீக்கிடு- பாபர் அசாம்க்கு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அறிவுரை!

0
3046
Babar

நாளை கிரிக்கெட் உலகில் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி, பதினாறாவது ஆசியக் கோப்பையில் இலங்கை கண்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது!

நடப்பு ஆசியக் கோப்பையில் முதல் போட்டியில் நேபாள் அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் இருநூறு ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமத் இருவரும் சதம் விளாசி இருந்தனர்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை 164 ரன்களுக்கு சுருட்டி, 39 ஓவர்களில் இலக்கை எட்டி, இலங்கை வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று ஆசியக் கோப்பை தொடரில் ஓய்வு நாளாகும். நாளை இலங்கை கண்டி மைதானத்தில் பாகிஸ்தான் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. போட்டி நாள் நெருங்க நெருங்க இருதரப்பில் இருந்தும் நிறைய கருத்துகளும் விவாதங்களும் பெருகி இருக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா கேப்டன் பாபர் அசாம்க்கு வெளிப்படையான ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அணியின் மூத்த வீரரை நீக்க சொல்லி கேட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“பெரிய பிரச்சனை பகார்ஜமான்தான். அவர் வழக்கத்திற்கு மாறான ஹிட்டர். அப்படி யாராவது ஃபார்மில் இல்லாமல் போனால், அவர்களது இடத்தை நிரப்புவது கொஞ்சம் கடினம். அவர் ஒரு பாட்டம் ஹேண்ட் பிளேயர். லெக் சைடில் விளையாடுகிறார். எப்படியோ இதை சமாளித்து ஸ்கோர் செய்கிறார்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அவரது நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு தற்பொழுது ஒரு இன்பார்ம் ஓபனர் தேவை.

இமாம் உல் ஹக்கும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தால் இவரும் பார்மில் இல்லாததால் அணிக்கு பெரிய அழுத்தம் உண்டாகிறது. பாகிஸ்தான் பகார் ஜமானை மதிப்பிட வேண்டும். அவருக்கு ஓய்வெடுத்து சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை ஓரங்கட்டுவது பாகிஸ்தானுக்கு நல்லது. அவர் நல்ல வீரர் அவருக்கான வாய்ப்பை பாகிஸ்தான் வழங்கியது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவரை வைத்து விளையாட முடியாது!” என்று கூறியிருக்கிறார்!