“சொந்த ரன்னுக்காக விளையாடினா கடைசியா இந்த நிலைமைதான் வரும்!” – பாபர் அசாம் மீது கம்பீர் தாக்கு!

0
556
Gambhir

நேற்று பாகிஸ்தான அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியில் படுதோல்வி சந்தித்து சொந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. ஆனாலும் கூட போட்டியை எடுத்ததும் துவங்குவதற்கு கடினமான ஆடுகளமாக அகமதாபாத் ஆடுகளம் இல்லை. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் விக்கட்டுக்கு 41 ரன்கள் கிடைக்க இரண்டு விக்கெட்டுக்கு 155 ரன்கள் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து பாகிஸ்தான் அணி சரியாக அணுகியிருந்தால் 280 முதல் 300 ரன்கள் தாராளமாகக் கிடைத்திருக்கும்.

ஆனால் அரைசதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முகமது சிராஜ் வீசிய பந்து ஒன்றை தவறாக விளையாடி விக்கெட்டை விட்டார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி மொத்தமாக சுருண்டு 191 ரன்களில் அடங்கிவிட்டது.

தற்பொழுது பாபர் அசாம் பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது ” பாபர் அசாம் தனக்காகத்தான் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். சாகித் அப்ரிடி, தவ்ஃபீக் உமர், இம்ரான் நசீர் ஆகியோர் மேல் வரிசையில் அதிரடியாக ரன்கள் அடிக்க விரும்பினார்கள்.

- Advertisement -

மேலும் இவர்கள் பாகிஸ்தானின் நடுவரிசையை ஒருங்கிணைக்கிறார்கள் என்பது வரலாறாக இருக்கிறது. இங்கே முதல் மூன்று இடங்களில் எதிரணியின் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு வீரர் கூட இல்லை.

உயர்தர தாக்குதலுக்கு எதிராக 150 ரன்கள் ஆல் அவுட் ஆனாலும் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுவோம் என்று டிரெஸ்ஸிங் ரூமில் விவாதிக்க வேண்டும். முதல் மூன்று பேர் சீக்கிரத்தில் வெளியேறினாலும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் வரக்கூடியவர்கள் ஆட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.

பாபர் அசாம் விளையாடியது மிகவும் மோசமான ஷாட். ஒரு உலக தரமான பேட்ஸ்மேன் அப்படி விளையாடு இருக்கக் கூடாது. நீங்கள் 50 ரன்கள் எடுத்திருந்தீர்கள். கிட்டத்தட்ட 60 பந்துகள் விளையாடி இருந்தீர்கள். பந்தில் அதிக பவுன்ஸ் இல்லை. அது உங்களுடைய லென்த் கிடையாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் லேட் கட் விளையாடி இருக்கலாம். ஆனால் பந்தை பஞ்ச் செய்தீர்கள்!” என்று கூறி இருக்கிறார்!