“இன்னொரு சான்ஸ் கிடைச்சாலும்.. நாங்க பர்ஸ்ட் பேட்டிங் பண்ண மாட்டோம்!” – பிடிவாத பேச்சு பேசிய நியூசிலாந்து கேப்டன்!

0
780
Latham

இன்று உலகக் கோப்பை தொடரில் மீண்டும் அதிரடியாக தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நியூசிலாந்து அணிக்கு எதிராக புனே மைதானத்தில் தொடர்ந்திருக்கிறது.

இன்று நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து பெரிய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கை துரத்தும் பொழுது அவர்கள் மிகவும் தடுமாற்றம் அடைகிறார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலக்கை துரத்திய பொழுது நெதர்லாந்து வேலைக்கு எதிராக தோல்வி அடைந்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே விக்கெட் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியோடு சேர்த்து அவர்கள் முதலில் பேட்டிங் செய்த பொழுது 350 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார்கள். மேலும் 100 ரன்கள் வித்தியாசத்திற்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி கண் முன்னால் எல்லாவிதமான புள்ளி விபரங்களும் இருந்தபொழுது, திட்டம் தீட்டுவதில் கில்லாடியான நியூசிலாந்து அணி இந்த முறை டாஸ் விஷயத்தில் கோட்டை விட்டது. அதற்கான தண்டனையாக 190 வித்தியாசத்தில் தோல்வி வந்திருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். எனவே இப்பொழுது அரை இறுதி வாய்ப்பில் பாகிஸ்தானும் உள்ளே வந்துவிட்டது. பாகிஸ்தான் தன்னுடைய கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி, அதே சமயத்தில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் சிக்கல் நீள்கிறது.

தோல்விக்குப்பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறும் பொழுது “இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது. எங்களை குயிண்டன் மற்றும் டேசன் இருவரும் பெரிய அழுத்தத்தில் வைத்தார்கள். நாங்கள் ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் நான் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்திருக்க மாட்டேன்.இது ஒரு சராசரியான ஆடுகளம். இங்கு அவர்களை நாங்கள் 340 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் எங்களுடைய பேட்டிங்கும் சரியில்லை. காயங்கள் குறித்து அதன் வருகின்ற வழி குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். இங்கிருந்து யோசித்து விட்டு நாங்கள் அடுத்து பெங்களூருக்கு கிளம்பி செல்ல வேண்டியதுதான்!” என்று கூறியிருக்கிறார்!