“இந்திய பிட்ச் பத்தி மத்தவங்க வாய மூடிட்டு இருக்கனும்.. இருந்தா எனக்கு ஓகே” – ரோகித் சர்மா அதிரடி!

0
1216
Rohit

நேற்று இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தென் ஆப்பிரிக்க கேப் டவுன் மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று இரண்டாவது நாள் உணவு இடைவேளை முடிந்து 12 ஓவர்களில் முடிவுக்கு வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

போட்டி நடைபெற்று முடிந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். இந்த ஆடுகளத்தில் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் மட்டுமே நிலைக்க விடும்.

- Advertisement -

எனவே பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் எப்பொழுதும் இருக்கும் வரை அதிரடியாக விளையாடுவதை திட்டமாக வைத்திருப்பார்கள். இந்த போட்டியிலும் இரு அணி பேட்ஸ்மேன்களும் அதையே செய்தார்கள்.

ஆனாலும் கூட ஒரு டெஸ்ட் போட்டி நூறு ஓவர்களில் முடிவது பெரிய விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு, போட்டிகள் மூன்று நாட்களில் முடிவுக்கு வருவது குறித்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட் வல்லுனர்கள் பெரிய விமர்சனங்களை முன் வைப்பார்கள். தற்பொழுது இந்த போட்டி குறித்து எதுவும் பேசாமல் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் போட்டி சீக்கிரத்தில் முடிவடைந்தது குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. வழக்கம்போல் ரோஹித் சர்மா அவருடைய பாணியில் இந்த கேள்விக்கு, வேடிக்கையாகவும், சிலருக்கு பதிலடி தரும் விதமாகவும் பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “போட்டி நடுவர்கள் ஆடுகளங்களுக்கு எப்படி மதிப்பெண் தருகிறார்கள்? எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். இந்திய ஆடுகளங்களில் முதல் நாள் பந்து திரும்பினால் அது மோசமானது, ஆனால் இங்கு முதல் நாளில் பந்து சீம் ஆனால் அது சிறப்பானது என்றால் இது நியாயம் கிடையாது.

இந்திய ஆடுகளங்களைப் பற்றி யாரும் வாயை மூடிக்கொண்டு குறை சொல்லாமல் இருக்கும் வரை, இது போன்ற ஆடுகளங்களில் விளையாடுவது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. நீங்கள் இங்கு சவால்களை சந்திக்கத்தான் வந்தீர்கள். அதுபோலவே இந்தியாவிற்கு வரும்பொழுதும் சவால்கள் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -