“ரிஷப் பண்ட் ஐபிஎல் நல்லா விளையாடினாலும்.. உலககோப்பை இந்திய டீம்க்கு வரமுடியாது..  காரணம் இதுதான்” – ஜாகிர் கான் பேட்டி

0
325
Pant

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று கூறலாம்.

ஆனால் இரண்டு இடங்கள் மட்டும் இன்னும் உறுதியாகாமலே இருக்கிறது. இதற்கான தேடல் ஐபிஎல் தொடர் முழுவதும் நடக்கும். அந்த இடம் இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கான இடம்.

- Advertisement -

தற்பொழுது இந்த இடத்திற்கு எந்த வீரரும் உறுதி செய்யப்படாமல் இருக்கின்ற காரணத்தினால், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா தாண்டி இஷான் கிஷான், கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட் என பட்டியல் நீள்கிறது.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசியிருந்தபொழுது ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியை எட்டி ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு நன்றாக விளையாடினார் என்றால், கேப்டன் ரோஹித் சர்மாவின் முதல் தேர்வாக ரிஷப் பண்ட் இருப்பார் என்று கூறியிருந்தார்.

இன்னொரு பக்கத்தில் கேஎல்.ராகுல் தனக்கு மிடில் வரிசையில் மட்டுமே இடம் கிடைக்கும் என்பதை உணர்ந்து, ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு மிடில் வரிசையில் விளையாடுவது குறித்து அணி நிர்வாகத்துடன் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதில் இஷான் கிஷானுக்கு மட்டுமே வாய்ப்புகள் குறைவாகி இருக்கிறது. ஏனென்றால் அவர் துவக்க இடத்தில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்.

- Advertisement -

இதைத் தாண்டி கொடுக்கப்பட்ட வாய்ப்பை சஞ்சு சாம்சன் மோசமாகத் தவற விட்டு விட்டார். இன்னொரு பக்கத்தில் ஜிதேஷ் சர்மா தொடர் வாய்ப்புகள் பெற்றாலும், அவருடைய ஆட்ட அணுகுமுறை மற்றும் ஷாட் தேர்வுகளால் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டாலும் பெரிய ஷாட் விளையாட போய் விக்கெட்டை கொடுக்கிறார்.

தற்பொழுது இதில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் வாய்ப்பு குறித்து பேசி உள்ள ஜாகிர் கான் ” ரிஷப் பண்ட் பயணத்தை எடுத்துப் பார்த்தால் அது எந்த ஒருவருக்கும் எளிமையானதாக இருக்காது. முதலில் கிரிக்கெட் மீது பற்றுள்ள அனைவரும் ரிஷப் பண்ட் மீண்டும் திரும்ப வந்ததில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவருக்கு கடக்க வேண்டிய தடைகள் நிறைய இருக்கிறது.

முதலில் அவர் திரும்பி வந்து விளையாட வேண்டும். இந்த நிலையில் அதை எளிதானது அல்ல. அதற்குப் பிறகு நீங்கள் போட்டிக்கு பழகி ரிதத்துக்கு வர வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்.

இப்படி எல்லாம் இல்லை, அவர் சீக்கிரம் வந்து விடுவார் என்றால் அது மகிழ்ச்சிதான். இந்த எல்லாவற்றையும் மனதில் வைத்து பார்த்தால், அவருக்கு இந்த முறை நல்ல ஐபிஎல் தொடர் அமைந்தால் கூட, அணி நிர்வாகம் அவரை உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்ய நினைக்காது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.