விராட் கோலி பவர்-பிளே வரைக்கும் ஆடிட்டு கெளம்பீறனும்; 15-20 ஓவர்கள் ஆடனும்னு நினைக்க கூடாது – கடுமையாக சாடிய முன்னாள் பயிற்சியாளர்!

0
470

விராட் கோலி நீண்ட நேரம் ஆடுகிறார். ஆனால் பவர்-பிளேயில் இருக்கும் அளவிற்கு, இவரது ஸ்ட்ரைக் ரேட் மிடில் ஓவர்களில் இல்லை. நீண்ட நேரம் விளையாடுவது சரியில்லை என்கிறவாறு கருத்து தெரிவித்திருக்கிறார் டாம் மூடி.

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் அடித்தது. இதில் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார் டு பிளசிஸ் இன்னும் சிறிது நேரம் போராடி 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது ஆர்சிபி அணி. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இப்போட்டியில் தற்காலிக கேப்டனாக விராட் கோலி விளையாடினார். ஆனாலும் இவரது பேட்டிங்கில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே அதிரடியுடன் விளையாடினார்.

விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் சேர்ந்து 16 ஓவர்கள் வரை விளையாடி 137 ரன்கள் குவித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் பற்றி விமர்சனம் வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, விராட் கோலி பவர்-பிளே ஓவர்களில் இருக்கும் அளவிற்கு மிடில் ஓவர்களில் ஆடுவதில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

“ஆர்சிபி அணியினர் முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தனர். இது மிகச்சிறப்பான விஷயம். ஆனால் அதில் ஒரு பேட்ஸ்மேன் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது சற்று ஆபத்தான விஷயம். நீண்ட ஓவர்கள் பிடித்து குறைவான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் பொழுது அணியின் ஸ்கோர் போதிய அளவிற்கு எட்டமுடியாமல் போகலாம்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் வந்திருந்தால் ஆர்சிபி அணிக்கு அது ஆபத்தாக முடிந்திருக்கலாம். பவர்-பிளே ஓவர்களில் விராட் கோலி அதிரடியாக விளையாடுகிறார். இது மிகச்சிறந்த விஷயம். ஆனால் மிடில் ஓவர்களில் அப்படியே குறைந்து விடுகிறது. இது திட்டமா அல்லது தடுமாற்றமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு இது சிறந்த விஷயமல்ல. மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு இந்த விஷயத்தில் சரி செய்யவேண்டும்.” என்று விராட் கோலியை சாடினார்.