16 வது ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை இங்கிலாந்தின் விராட் கோலி ஹாரி புரூக் அடித்தார்!

0
1734
Harry brook

பதினாறாவது ஐபிஎல் சீசனின் 19 ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு துவக்கம் தர வந்த மயங்க் அகர்வால் மற்றும் ஹாரி புரூக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் கொடுத்தார்கள். மயங்க் அகர்வால் 13 பந்தில் 9 ரன்களும், அடுத்து வந்த ராகுல் திரிபாதி 4 பந்தில் 9 ரன்களும் எடுத்து ரசல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் ஹாரி புரூக் உடன் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 26 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து வந்த இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு நடுவில் இவர்கள் இருவருடனும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் மூன்று ஆட்டங்கள் கழித்து தனது முதல் அரை சதத்தை ஐபிஎல் தொடரில் பதிவு செய்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில், 55 பந்துகளை மொத்தமாக சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் இந்த ஐபிஎல் சீசனிலும் தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று அசத்தினார்.

இறுதியில் வந்த கிளாசன் ஆட்டம் இழக்காமல் 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி நான்கு விக்கட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவே ஒரு அணியின் தற்போதைய அதிகபட்ச ரன்களாகும்.

- Advertisement -

கொல்கத்தா அணி தரப்பில் 2.1 ஓவர் பந்து வீசி 22 ரன்கள் விட்டுத் தந்து ரசல் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் காயத்தின் காரணமாக தொடர்ந்து இவரால் பந்து வீச முடியாமல் வெளியேறி இருக்கிறார். எனவே பேட்டிங் செய்ய களத்திற்கு வருவாரா என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!