0 போட்டி..20 வயது.. இந்தியா தொடர் இங்கிலாந்து அணியில் மர்ம வீரர்.. யார் இந்த சோயப் பஷீர்?

0
1147

இங்கிலாந்து அணி அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 16 பேர் கொண்ட அணியில் இரண்டு அறிமுக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் இந்தியத் தொடரில் பங்கேற்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

ப்ரெண்டன் மெக்கல்லம் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு பென்ஸ் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்டில் ஆக்ரோஷமான அணுகு முறையை பின்பற்றி வருகிறது. இதற்கு அவர்களுக்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. எனவே இந்தியத் தொடரிலும் இதே ஆக்ரோஷமான ஆட்டமுறையைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கடைசியாக இங்கிலாந்திடம் 2012ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் 11 வருடங்களாக உலகில் எந்த அணிக்கு எதிராகவும் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. எனவே மெக்கல்லம், பென்ஸ்டோக்ஸ் கூட்டணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்து அணி மிகப்பெரிய சவாலை இந்தியாவுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த தொடரில் விளையாடுகிறார். இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழற் பந்துவீச்சுக்கு பெரிதும் சாதகமானவை. இங்கிலாந்து அணி சுதாரிப்பாக நாலு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களை இறக்கியுள்ளது.

- Advertisement -

ஜேக் லீச், ரெஹன் அஹ்மத், சோயப் பசீர், டாம் ஹார்ட்லி. இதில் டாம் ஹாட்லி மற்றும் சோயப் பசீர் இரண்டு அறிமுக வீரர்கள் . 24 வயதான டாம் ஹாட்லி இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் இருபது முதல் தரப் போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீர். 20 வயது ஆப் ஸ்பின்னரான இவர், தனது முதல் தர கிரிக்கெட்டில் ஆறு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டைகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஜூன் மாதம் கவுன்டி கிரிக்கெட்டில் சோமர் செட் அணிக்காக விளையாடி உள்ளார்.

சோயப் பஷீர் அரபு எமிரேட்டில் இங்கிலாந்து லயன்ஸ்இன் பயிற்சி முகாமில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்துள்ளார். கடைசியாக ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் 24 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பஷீர் அணியில் இடம் பிடித்தது குறித்து இங்கிலாந்தின் கிரிக்கெட் இயக்குனர் ராப் கீ கூறுகையில், “பஷீரின் இயல்பான குணாதிசயங்கள் மற்றும் அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் ஆகியவைதான் முதல்தர கிரிக்கெட்டைத் தவிர்த்து அவரை அணியில் எடுக்கத் தேர்வாளர்களை ஊக்குவித்தது. மேலும் பென்ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் உருவாக்கிய அணியின் சூழல் அவருக்கு நன்கு உதவும்” என்று கூறி இருக்கிறார்.