இங்கிலாந்து பிரச்சனை ஆரம்பம் ; ஐபிஎல் இறுதியில் இருக்க மாட்டாரா பென் ஸ்டோக்ஸ்? சிஎஸ்கே கலக்கம்!

0
668
Ben Stokes

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் உலகின் மிகப் பிரபலமான டி20 லீக் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் இறுதி மார்ச் 31ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் தொடர்ந்து மே 28ஆம் தேதி முடிவடைகிறது!

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டுடன் 15 சீசன்களை நிறைவு செய்து இந்த ஆண்டு 16-வது சீசனில் கால் எடுத்து வைக்கிறது. கடந்த ஆண்டு மெகா ஏலத்துடன் துவங்கிய ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மினி ஏலத்தில் துவங்குகிறது!

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் இங்கிலாந்தின் சாம் கரன் அதிக விலைக்கு ஏலத்தில் போனார். இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு பெரிய விலைக்கு வாங்கப்பட்டார்.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு உள்நாட்டில் நடைபெற இருக்கும் மிக முக்கியமான டெஸ்ட் தொடரான ஆஸஷ் தொடர் ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கு முன்பாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அயர்லாந்து அணி உடன் இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் விளையாட இருக்கிறது.

தற்பொழுது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது. இந்த அயர்லாந்து டெஸ்ட் அறிவிப்பு குறித்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் இடம் கேட்ட பொழுது, அதற்கு அவர் இதற்கு முன்கூட்டியே அணியை சொல்ல முடியாது என்றும், தான் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தகுந்தார் போல் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு தகுந்தார் போல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவுண்டி கிளப் டெஸ்ட் போட்டிகளின் முதல் சுற்றை மே மாதம் 18 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் நிரந்தர ஒப்பந்தத்தில் உள்ள ஜோ ரூட், சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ போன்றவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பினால் சென்றுதான் ஆகவேண்டும்.

இப்படியான காரணங்களால் தற்பொழுது ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக பங்கேற்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் அயர்லாந்து அணி உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று கூறியுள்ளது, சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அவர் விளையாட மாட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.