இந்திய அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரம் வீரருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
பும்ரா – ஜோப்ரா ஆர்ச்சர்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் புப்ரா இடம்பெறுவாரா? என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஏனென்றால் பதினைந்து பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் நட்சத்திர அதிவேக பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியின் பவுலிங் யூனிட் சுமாராக இருக்கும் நிலையில் இங்கிலாந்து பவுலிங் யூனிட்டில் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்வது அந்த அணியை மேலும் வலுவாக்கும் என்றும், அதே சூழ்நிலையில் ஆர்ச்சர் வரும்பொழுது பும்ரா இல்லாமல் போனால் அது இந்திய அணியை பெரிய அளவில் பலவீனமாக்கும் என்றும் கூறப்பட்டது.
மகிழ்ச்சி செய்தி
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை. காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு தேவை என கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரை சேர்க்காமல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே தொடர்கிறது.
இதையும் படிங்க : ஒருநாள் ஊதியம் ரூ.600.. கனவுகளை துரத்தி சாதித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து பிளேயிங் லெவன்:
ஜாக் கிராவ்லி
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட்
ஹாரி புரூக்
பென் ஸ்டோக்ஸ்
ஜேமி ஸ்மித்
கிறிஸ் வோக்ஸ்
பிரைடன் கார்ஸ்
ஜோஷ் டாங்
ஷோயிப் பஷீர்






