இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் லேசாக காயமடைந்திருந்த கேப்டன் ஸ்டோக்ஸ் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார். அவரது விலகல் இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
தற்போது பென் ஸ்டோக்ஸ் விலகி இருக்கின்ற காரணத்தினால் அவருடைய இடத்திற்கு இளம் இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் இடத்திற்கு கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இத்துடன் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் டாசன் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சிஎஸ்கே வேலப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் பிரைடன் கார்ஸ் இடத்திற்கு மீண்டும் ஜோஸ் டங்க் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மொத்தம் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து டீம் சிக்கிடுச்சு.. நாளைக்கு இதை மட்டும் செய்யுங்க சும்மா அடக்கலாம் – அஸ்வின் அறிவுரை
ஜாக் கிராலி
பென் டக்கெட்
ஓலி போப் (c)
ஜோ ரூட்
ஹாரி புரூக்
ஜேக்கப் பெத்தேல்
ஜேமி ஸ்மித் (வி.கீ)
கிறிஸ் வோக்ஸ்
கஸ் அட்கின்சன்
ஜேமி ஓவர்டன்
ஜோஷ் நாக்கு