இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மிக முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரை டிரா செய்து அசத்த முடியும். அதே சமயத்தில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
ஜடேஜாவுக்கு இதை செய்யுங்கள்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்துவீச்சு பணி அதிகம் இருக்கும் என்றால் அவரை ஆறாவது இடத்தில் களம் இறக்கலாம். இல்லையென்றால் அவரை ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவது அவசியம். ஏனென்றால் தற்போது அவர் சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார். இதை நிலைநிறுத்தி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது”
“அதே சமயத்தில் ரிஷப் பண்ட் இடத்திற்கு விளையாடக்கூடிய துருவ் ஜுரல் நல்ல பேட்ஸ்மேன். அவர் முக்கியமான சில போட்டிகள் விளையாடியிருக்கிறார். எனவே அவரை நேரடியாக ஐந்தாவது இடத்தில் விளையாட வைத்தாலும் தவறு கிடையாது. இருந்தாலும் ஜடேஜா தொடர் முழுக்க சிறப்பாக இருப்பதால் இதை செய்யலாம்”
இங்கிலாந்து களைப்பாக இருக்கிறது
“நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு மொத்தம் மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் 140 ஓவர்கள் பந்துவீசி மிகவும் களைப்பாக இருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களில் அவர்களால் இதிலிருந்து மீண்டு வர முடியுமா? என்று சொல்ல முடியாது”
இதையும் படிங்க : தெ.ஆ ODI டி20 தொடர்.. ஆஸி அணிகள் அறிவிப்பு.. கேப்டன் அதிரடி மாற்றம்.. ஒருநாள் கிரிக்கெட் சோகம்
“எனவே இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். மேலும் குல்தீப் யாதவை விளையாடுவதாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்வது நல்லது. இப்படி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது சிறப்பாக செய்தால் மீண்டும் இங்கிலாந்து வீரர்கள் களத்தில் நிற்க வேண்டியது வரும். இது அவர்களை அதிகபட்சமாக களைப்பாக்கும். ஒருவேளை ஆடுகளம் பச்சையாக இல்லை என்றால் இந்திய அணி இதை தாராளமாக செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.






