இங்கிலாந்து முக்கிய வீரர் விலகல்.. வெறுப்பாக இருக்கிறது என்று ஸ்டோக்ஸ் புலம்பல்.. பரபரப்பு தகவல்கள்

0
2830
Stokes

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் மேல் இருந்த அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு தற்போது இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி எப்படி வரும்? எப்படி விளையாடும்? என்று இந்திய அணியின் மீது மாறி இருக்கிறது.

இந்தத் தொடருக்கு அனுபவம் இல்லாத சுழல் பந்துவீச்சு படையை இங்கிலாந்து அழைத்து வந்திருக்கிறது. அதில் ஒரே ஒரு அனுபவ சுழற் பந்துவீச்சாளராக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இருக்கிறார்.

இவர் கடந்த சில மாதங்களாக காயம் அடைந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் காயம் சரியாகி இருக்க இந்திய தொடருக்கு இவரை நம்பி இங்கிலாந்து நிர்வாகம் அழைத்து வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது இவர் காயம் அடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக சோயப் பஷீர் இளம் சுழற் பந்துவீச்சாளர் அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் இது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோஸ் கூறும் பொழுது ” அவருக்கு முழங்காலில் காயம் அடைந்திருக்கிறது. அவர் இதனால் அதிக நாள் அணியை விட்டு வெளியே இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு பெரிய அவமானமாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு வந்து மீண்டும் காயமடைந்திருக்கிறார். இது வெறுப்படைய வைக்கிறது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் நிலைமையை குறித்து மதிப்பீடு செய்கிறோம்.

சோயப் பஷீர் பந்து வீசிய பொழுது நான் ஒன்றை பார்த்தேன், அவர் வந்து வீட்டில் அதிரடியாக நிறைய புரட்சிகள் செய்வார் என்று தெளிவாகத் தெரிந்தது. அவர் நல்ல உயரத்தில் இருந்து பந்து வீசுகிறார். மேலும் வேரியேஷன் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “சமியால் பும்ராவுக்கு பிரச்சனையா?.. நான் அவருக்கு சல்யூட் பண்றேன்” – இர்பான் பதான் வெளிப்படையான பேச்சு

அவர் இங்கிலாந்து அணியின் தேர்வுக்காக வந்திருந்த பொழுது நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை. இந்திய சூழ்நிலைகளில் அவரால் சாதிக்க முடியும் என்று நாங்கள் பார்த்ததும் தெரிந்து கொண்டோம். எங்கள் குழுவில் நாங்கள் விரும்பிய எல்லாவற்றுக்கும் அவர் பதில் தந்தார்” என்று கூறியிருக்கிறார்.