இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்சில் 556 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோ ரூட் இதுவரை யாரும் செய்யாத சாதனையை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நிகழ்த்தியிருக்கிறார்.
இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடைபெற்ற வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடர்ந்து விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்ந்துவரும் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
கடந்த காலங்களில் பேட்டிங்கில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்து மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி இருக்கும் ஜோ ரூட் தற்போது இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் இதுவரை 32 ரன்கள் குவித்து களத்தில் இருக்கும் நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.
வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்
2019ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதை அடுத்து இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 107 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 5005 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதில் இவரது பேட்டிங் சராசரி 51.59 ஆக இருக்கிறது. இதில் 16 சதங்களும் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்த டீம ஜெயிக்கிறது ஒரு விஷயமா.. ஹர்திக் பாண்டியா அப்படி பெருசா ஒன்னும் பண்ணல – ஆர்பி சிங் கருத்து
அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷன் 45 போட்டிகளில் விளையாடி 3904 ரன்கள், அதே நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் 45 போட்டிகளில் விளையாடி 3,486 ரன்களும்,இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் 48 போட்டிகளில் விளையாடி 3101 ரன்களும், அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானின் பாபர் அசாம் 32 போட்டிகளில் விளையாடி 2755 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்தியாவைச் சேர்ந்த உலகத் தரமான வீரரான விராட் கோலி இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.