இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து தான் அதிகமாக மகிழ்ச்சி அடையவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்பி சிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
முதல் டி20 போட்டியில் அசத்தல்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறிய ஹார்த்திக் பாண்டியா அதன் பிறகு இந்திய அணி விளையாடிய எந்த போட்டியிலும் பங்கு பெறவில்லை. அதற்குப் பிறகு காயத்தில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கு பெற்று இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக பங்காற்றி உலகக் கோப்பை வென்று தரவும் உதவினார்.
அதற்குப் பிறகு கவனிக்கத்தக்க அம்சமாக வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்து வீச்சில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய நிலையில் பேட்டிங்கில் 16 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 39 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா இதை சிறந்த அணியுடன் செயல்படுத்த வேண்டும் எனவும், வங்கதேச அணி போன்ற உயர் மட்டத்தில் இல்லாத அணியை வீழ்த்துவது பெரிய விஷயம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இது பெரிய விஷயம் கிடையாது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தை வைத்து ஒரு வீரரை மதிப்பிடுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். வங்கதேச அணி தற்போது விளையாடும் விதம் உயர் மட்டத்தில் இல்லை. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதுபோன்ற செயல்படுவதில் அவர் மிகவும் வல்லவர். ஆனால் இந்த அணிக்கு எதிராக அவரது ஆட்டத்தை வைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்தியா பைனல் போனால் மாறும் போட்டி நடக்கும் மைதானம்.. பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு
ஒரு சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் அல்லது ஒரு சிறந்த போட்டியில் அதைச் செய்ய வேண்டும். அணி வெற்றி பெறும் தருணத்தில் இருக்கும் போதும் அல்லது சேஸ் செய்யக்கூடிய ரன்கள் பெரிய அளவில் இல்லை என்பதை உணரும் போது சுதந்திரமாக உணர்வது உண்டு. ஹர்திக் பாண்டியா போட்டியை முடிக்க வேண்டும் என்ற கடினமான சூழ்நிலையை வங்கதேசம் உருவாக்கவில்லை” என்று ஆர் பி சிங் கூறியிருக்கிறார்.






