நானும் ரிங்குவும் அடிச்சு ஆடுறுதற்கு முன்னாடி.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்பி இறங்குனோம் – நிதிஷ்குமார் பேட்டி

0
235

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் பேட்டிங் பார்ட்னர்ஷிப் ஆகும். அவர்களது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பால் தான் இந்திய அணி மிகப்பெரிய ரன்களைக் குவித்தது.

இந்த சூழ்நிலையில் தனது அதிரடி ஆட்டத்தை துவங்குவதற்கு முன்பாக ரிங்கு சிங்கிடம் நடந்த உரையாடல் குறித்து நிதீஷ் குமார் ரெட்டி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நித்திஷ் குமார் ரெட்டி அதிரடி ஆட்டம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 5.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் அதற்கடுத்து ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இருவர் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 108 ரன்கள் குவித்தது.

எட்டாவது ஓவர் வரை 11 பந்துகளில் 12 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருந்த நித்தீஷ் குமார் ரெட்டி அதற்குப் பிறகு முற்றிலுமாக தனது கியரை மாற்றி 34 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் போட்டியின் போது ரிங்கு சிங்குடன் நடந்த உரையாடல் குறித்து நிதீஷ் குமார் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதை முழுமையாக நம்பி விளையாட ஆரம்பித்தோம்

இதுகுறித்து அவர் கூறும் போது “நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எனக்கும் ரிங்குவுக்கும் நடந்த உரையாடல் என்னவென்றால், இது கடவுளின் திட்டமாக இருக்கலாம் என்பதை முழுமையாக நம்பி நாங்கள் அடித்து விளையாட ஆரம்பித்தோம். அதனை முழுமையாக நம்பி அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம். நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது சுழற் பந்துவீச்சை உள்ளே கொண்டு வந்ததால் அதனை அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

இதையும் படிங்க:147 ஆண்டு டெஸ்ட் வரலாறு.. ஜோ ரூட் ஆசியாவில் செய்த அமர்க்கள சாதனை.. நம்பர் 1 ஃபாரின் பேட்ஸ்மேன்

ரிங்கு சிங்கிள் மட்டும் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். எனவே இது என்னுடைய நேரம் என்று கூறி அவரைப் பின்பற்றி என்னுடைய அதிரடி ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தேன்” என்று கூறியிருக்கிறார். இதில் ரிங்கு சிங் 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 53 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே ஆன கடைசி டி20 போட்டி வருகிற சனிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -