இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரருக்கு வாய்ப்பு.. பென் ஸ்டோக்ஸ் வைத்த ட்விஸ்ட்

0
276
Stokes

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் சற்று வறட்சியாகவும் விரிசல் கொண்டதாகவும் இருக்கிறது. ஆனாலும் இங்கு பொதுவாக பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமே கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் தரப்பில் ரேகான் அகமத் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சோயப் பஷீரும், மார்க் வுட் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் ஒல்லி ராபின்சன்னும் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.

இந்திய அணியின் தரப்பில் ஒரே ஒரு மட்டும் செய்யப்பட்டு இருக்கிறது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதால் அவருடைய இடத்தில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி டிரா செய்தது. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

டாஸ் நிகழ்வுக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்பொழுது ” டாஸ் ஜெயித்திருந்தால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம். ஆடுகளம் வறண்டும் விரிசல்கள் கொண்டதாகவும் காணப்படுகிறது. ஆனால் இங்குள்ள ஆடுகளத்தில் அதுதான் சிறப்பு. கடைசி இரண்டு ஆட்டங்கள் எங்களுக்கு சிறப்பாக ஆரம்பித்திருந்தன.

இளம் வீரர்கள் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு சவாலை ஏற்றுக் கொண்டார்கள். ஆகாஷ் தீப் அறிமுகம் ஆகிறார்” என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறும் பொழுது “இந்த ஆடுகளம் முதல் ஒரு மணி நேரத்திற்கு எப்படி இருக்கிறது என்று புரியாது. ஆனாலும் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். எனக்கு பந்துவீச்சு நன்றாக வருகிறது. பந்துவீசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தொடர் முழுவதும் செயல்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பலவற்றை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “ஐபிஎல்-ல் ஹைடன் கில்கிறிஸ்டுக்கு நடந்ததுதான் தோனிக்கும் நடக்கும்.. அவர்தான் சொல்லனும்” – பார்த்திவ் படேல் பேட்டி

மேலும் இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசலாம் என ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார். அவர் பந்து வீசும் பொழுது இந்த போட்டிக்கு மட்டும் அல்லாமல் அடுத்த போட்டியிலும் அவர்கள் வேறு மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -