37-5.. காப்பாற்றிய கேப்டன் பவல்.. சாம் கரன் காட்டிய அதிரடி.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

0
409
Powell

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சாம் கரனின் அதிரடியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை முதல் மூன்று ஆட்டங்களையும் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்திற்கு இங்கிலாந்து அணி வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 எனக் கைப்பற்றியது. தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.

- Advertisement -

37-5 சரிந்த வெஸ்ட் இண்டீஸ்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லீவிஸ் 3, ஷாய் ஹோப் 4, பூரன் 7, ரோஸ்டன் சேஸ் 7, ஹெட்மையர் 2 என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை பவர் பிளேவுக்குள் இழந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ரோமன் பவல் 41 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள் எடுத்தார். இவருடன் சார்ந்து விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட் 28 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 57 பந்தில் 73 ரன்கள் எடுத்தது. கடைசியில் அல்ஜாரி ஜோசப் ஆட்டம் இழக்காமல் 19 பந்தில் 21 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் மற்றும் ஓவர்டன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சாம் கரனின் அதிரடி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் 4, வில் ஜேக்ஸ் 32, ஜோஸ் பட்லர் 4, ஜேக்கப் பெத்தேல் 4 என்று தொடர்ந்து வெளியேறினார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கும் சிக்கல் ஏற்பட்டது.

இதையும் படிங்க : ரோஹித் ஸ்டார்க்கிட்ட கவனமா இருங்க.. ஏன்னா அவர்கிட்ட இந்த விஷயத்துலதான் மாட்டுவீங்க – சுனில் கவாஸ்கர் அறிவுரை

இந்த நேரத்தில் சாம் கரன் அதிரடியாக 21 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து கொஞ்சம் பொறுமையாக விளையாடிய லிவிங்ஸ்டன் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசியில் விக்கெட் விழ மீண்டும் ஆட்டம் பரபரப்பானது. இந்த நிலையில் 19.2 ஓவரில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் தற்பொழுது 3-0 எனக் கைப்பற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகேல் ஹூசைன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -