பாகிஸ்தான அணி மீண்டும் சொந்த நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஷான் மசூத் 151 ரன்கள் எடுக்க அந்த அணி 556 ரன்கள் குவித்தது. ஜாக் லீச் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கடுமையாக கிளம்பியது.
இங்கிலாந்து தந்த இரட்டை பதிலடி
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு இரட்டை பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 262 மற்றும் ஹாரி புரூக் 317 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 823 ரன்கள் ஏழு விக்கெட் இழப்புக்கு குவித்து டிக்ளர் செய்தது.
இதைத்தொடர்ந்து பின்னலையில் விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்று நான்காம் நாள் முடிவில் 150 ரன்கள் தாண்டி ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. எனவே இன்று ஏதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கின்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது.
தோல்வியில் உலகச்சாதனை படைத்த பாகிஸ்தான்
இந்த நிலையில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆகா சல்மான் 63, அமீர் ஜமால் 55 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் 220 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் தரப்பில் ஜாக் லீச் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ரோகித் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு வந்தால்.. கண்டிப்பா இது நடக்கும்.. ஒரு டீம் மட்டும் கிடையாது – ஹர்பஜன் சிங் கருத்து
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தோல்வி அடைந்த ஒரே அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனையை படைத்திருக்கிறது. இதுவரையில் எந்த ஒரு அணியும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்து தோல்வி அடைந்தது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் கடந்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் இப்படியான அரிய தோல்வியை பாகிஸ்தான் அணி அடைந்திருக்கிறது!






