நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவித்தது மட்டும் இல்லாமல் 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.
தற்போது வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்று பயணம் செய்திருக்கிறது. இதில் இரண்டாவதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
நொறுக்கி தள்ளிய இங்கிலாந்து
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கேட் 48 பந்தில் 60 ரன்கள், ஜெமி ஸ்மித் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து ஜோ ரூட் 65 பந்தில் 57 ரன்கள், கேப்டன் ஹாரி புரூக் 45 பந்தில் 58 ரன்கள், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 53 பந்தில் 82 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சரியாக எட்டு விக்கெட் இழப்புக்கு 400 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்து மெகா வெற்றி
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 21 பந்தில் 25 ரன்கள், கேசி கார்தி 26 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபமாக 26.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதையும் படிங்க : ஆர்சிபிகிட்ட 101 ரன்னில் சுருண்டது.. மறக்க வேண்டிய நாள் இல்ல.. எங்க தோல்விக்கு இதான் காரணம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை முதல் ஒருநாள் போட்டியில் பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஷாகிப் மக்மத் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா மூன்று விக்கெட்டுகள், ஆதில் ரஷித் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். புதிய கேப்டன் ஹாரி புரூக் தலைமையில் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அதிரடியான வெற்றியை பெற்று இருக்கிறது.






