ஆர்சிபிகிட்ட 101 ரன்னில் சுருண்டது.. மறக்க வேண்டிய நாள் இல்ல.. எங்க தோல்விக்கு இதான் காரணம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
797
Shreyas

இன்று ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச் சுற்று போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டி பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. போட்டிக்கான டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் மாறுபட்ட பவுன்ஸ் இருந்த காரணத்தினால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகம் இருந்தது. இதை ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

- Advertisement -

சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மேற்கொண்டு விளையாடி 14 ஓவர்களில் வெறும் 120 ரன் எடுத்து சுருண்டது. ஆர்சிபி அணியின் தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஸ் சர்மா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இறுதி வரை களத்தில் இருந்து 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தோல்விக்கு காரணம் இதுதான்

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசி உள்ள பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “இது மறக்க வேண்டிய ஒரு நாள் கிடையாது. ஆனால் நாங்கள் திரும்பி டிராயிங் போர்டுக்கு செல்ல வேண்டும். நாங்கள் தொடர்ச்சியாக நிறைய விக்கெட்டுகளை இழந்து. நாங்கள் திரும்பி சென்று படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேர்மையாக சொல்வது என்றால் நான் எடுத்த முடிவுகள் குறித்து சந்தேகப்படவில்லை. திட்டமாக மைதானத்திற்கு வெளியே நாங்கள் செய்தது எல்லாம் சரிதான். ஆனால் களத்தில் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை”

இதையும் படிங்க : வெறும் 101 ரன்.. மும்பையை தாண்டி மாஸ் ரெக்கார்டு படைத்த ஆர்சிபி.. முல்லன்பூரில் பஞ்சாபுக்கு சோகம்

“எங்கள் பந்துவீச்சாளர்களை எதுவும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் இது தற்காப்பதற்கு மிகவும் குறைந்த ஸ்கோர். நாங்கள் இங்கு பேட்டிங்கில் உழைக்க வேண்டி இருந்தது. இங்கு விளையாடிய எல்லா போட்டிகளிலும் பவுன்ஸ் மாறுபாடு இருந்தது. ஆனால் நான் இது போன்ற காரணங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்திருக்க வேண்டும். நாங்கள் போரில் தோல்வி அடைந்து விட்டோம், ஆனால் போரை அல்ல” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -