கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஒரு ஓவருக்கு 4 ரன்கள் அடித்தால் போதும்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. உச்சக்கட்ட பரபரப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் அடித்து இருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

- Advertisement -

இந்திய அணி 600 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 471 ரன்களுக்கு சுருண்டது.  இங்கிலாந்து அணி 465 ரன்கள் வரை அருகில் வந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெறும் ஆறு ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா களமிறங்கியது.

இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு:

ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததன் காரணமாக இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து இருந்த போது ஐந்தாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.

பும்ரா, சிராஜ் ஆகியோர் புதிய பந்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஜாக் கிராலி 93 பந்துகளில் 42 ரன்களும், பென் டக்கட் 89 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

தோல்வியை நோக்கி இந்திய அணி:

இதனால் மதிய உணவு நேர இடைவெளியின் போது இங்கிலாந்து அணி 30 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த சூழலில் இன்னும் 66 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 254 ரன்கள் தான் தேவை. இதன் காரணமாக ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் எடுத்தால் கூட இங்கிலாந்து அணி இந்த இலக்கை எட்டி விட முடியும்.

இதையும் படிங்க: இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்? என்ன காரணம்?

இது கில் படைக்கு கடும் நெருக்கடியில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் டிரா செய்ய வேண்டும் என்றால் விரைவில் வீழ்த்த வேண்டும். பும்ரா, சிராஜ் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. இதன் காரணமாக சிராஜ் இருவரும் இன்றைய நாளில் அதிக ஓவர்கள் வீச வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts