இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுக வாய்ப்பை பெற்றிருக்கிறார். மேலும் இந்திய அணி சிறப்பான பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் துவங்குகிறது. சற்று நேரத்திற்கு முன்பு இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வு நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.
இங்கிலாந்து பக்கம் அதிர்ஷ்டம்
இந்த போட்டிக்கான நாட்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் இந்த குறிப்பிட்ட மைதானத்தில் முதல் நாளில் பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டாசில் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.
மேலும் இந்த போட்டிக்கான இந்திய அணிகள் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் கவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். எட்டு வரையில் பேட்டிங் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
முதலில் பந்துவீசி இருப்பேன்
டாஸ் நிகழ்வில் கேப்டன் கில் பேசும் பொழுது “நானும் டாஸ் வெற்றி பெற்று இருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பேன். முதல் செஷன் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதைத் தாண்டி விட்டால் பேட்டிங் செய்வது எளிதாக எங்களுக்கு மாறிவிடும். எங்களுடைய தயாரிப்பு அற்புதமாக இருக்கிறது. நாங்கள் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியிருக்கிறோம். சாய் அறிமுகமாகிறார், கருண் விளையாடுகிறார். மேலும் சாய் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் பெரிய மேட்டரே கிடையாது.. எனக்கு இந்த 4 விஷயம் தான் கிரிக்கெட்ல பெருசு – சுப்மன் கில் பேச்சு
இந்திய பிளேயிங் XI: ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், கில் ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.






