இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. இந்திய வலிமையான பிளேயிங் லெவன் எதுவாக இருக்கும்?.. போட்டி அட்டவணை.. முழு அலசல்

0
217
ICT

இந்திய அணி ஜனவரி 25ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராக இது அமைந்திருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத், இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினம், மூன்றாவது டெஸ்ட் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட், நான்காவது டெஸ்ட் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சி, ஐந்தாவது டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தர்மசாலா ஆகிய மைதானங்களில் நடக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய சூழ்நிலையை ஒத்து இருக்கும் அபுதாபியில் 9 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அமைத்து இங்கிலாந்து அணி பயிற்சி செய்கிறது. இதற்காக வெகு நாட்களுக்கு முன்பே இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது. ரகானே இடத்திற்கு கேஎல் ராகுல் திரும்பி இருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக கே எஸ் பரத் மற்றும் துருவ் ஜுரல் இருக்கிறார்கள். காயத்தால் சமி இடம்பெறாததால் ஆவேஸ் கான் வந்திருக்கிறார்.

மிக முக்கியமாக சுழற் பந்துவீச்சு கூட்டணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் குல்தீப் யாதவ் சைனா மேன் சுழற் பந்துவீச்சாளர் என்பதால் அக்சர் படேல் இடத்தில் விளையாட வைக்கலாம். ஆனால் கடந்த இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தில் அக்சர் படேல் தனி ஒருவராக இங்கிலாந்தை சாய்த்தார். எனவே அவரை விலக்க மாட்டார்கள்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், கேஎஸ் பாரத் (விகீ), துருவ் ஜூரல் (விகீ), அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (து. கே) மற்றும் ஆவேஷ் கான்.

முதல் போட்டிக்கான உத்தேச வலிமையான இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, ஜெயஸ்வால், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், பும்ரா மற்றும் சிராஜ்.