இந்திய கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்.. கம்பீர் பிட்ச் பராமரிப்பாளர் பிரச்சனை.. மனம் திறந்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் ஆகியோர் இடையேயான வாக்குவாதம் குறித்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முதல் துவங்க உள்ளது. இந்திய அணி இந்த போட்டிகள் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்த சூழ்நிலையில் ஓவல் மைதானத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, மைதான பராமரிப்பாளர் லீ போர்டிஸ் 2.5 மீட்டர் தொலைவில் இருந்து ஆய்வு செய்யுமாறு கூறியிருக்கிறார். அப்போது கம்பீர் மற்றும் போர்ட்டிஸ் ஆகியோர்க்கிடையே இந்த நிகழ்வு வாக்குவாதமாக மாறிய நிலையில் இது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு முன்னரே ஓவல் மைதான பராமரிப்பாளர் சில சர்ச்சையான விஷயங்களுக்கும் பெயர் போனவர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் பேட்டி

இந்த சூழ்நிலையில் காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸிடம், பத்திரிகையாளர் ஒருவர் ஓவல் மைதானத்தை 2.5 மீட்டர் தொலைவில் இருந்து ஆய்வு செய்யுமாறு உங்களுக்கு ஏதேனும் அறிவுரைகள் வழங்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அது குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் ஸ்டோக்ஸ் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க:ஐயோ வேண்டாம்.. தயவு செய்து இந்த வீரருக்கு வாய்ப்பு தாங்க.. மேலும் 2 வீரரை நீக்கனும்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

இதுகுறித்து அவர் கூறும்போது “இது நேற்று நடைபெற்ற விஷயமாகும். ஆனால் இந்த விஷயங்களை பார்க்காமல் கடந்து செல்வது என்பது கடினம். இந்த நிகழ்வு நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. அதனால் முழுமையாக என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஓவல் மைதானம் குறித்து கூற வேண்டும் என்றால், முதல் நாளிலிருந்து ஆடுகளம் வேக பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் விளையாடிய ஆடுகளங்களை விட இந்த ஆடுகளத்தில் புல் நிறைய இருக்கிறது. எனவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இது உதவி அளித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by